For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முதலில் இந்தியா... இப்போது ஈரான்... பாக்.,மீது துல்லிய தாக்குதல்

Google Oneindia Tamil News

இஸ்லாமாபாத் : இந்தியாவைத் தொடர்ந்து ஈரானும் பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் நடத்தி உள்ளது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர். தனது நாட்டின் 2 வீரர்களை மீட்பதற்காக ஈரான் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

2018 ம் ஆண்டு அக்டோபர் 16 ம் தேதி, பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்ட ஜெய்சி உல் அதல் என்ற பயங்கரவாத அமைப்பு, ஈரானின் உயரடுக்கு புரட்சி படையை சேர்ந்த 12 வீரர்களை கடத்திச் சென்றது. பாகிஸ்தான் எல்லை பகுதியான சிஸ்தன் மற்றும் பலுசிஸ்தான் பகுதிகளில் இவர்களை கொண்டு சென்றது.

Iran conducts surgical strike in Pakistan, frees border guards held by Baloch terrorists

கூட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, கடத்தப்பட்ட வீரர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து 2018 நவம்பர் மாதம் 5 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 2019 ம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்தான் ராணுவத்தால் மேலும் 4 ஈரான் நாட்டு வீரர்கள் மீட்கப்பட்டனர். அத்துடன் ஈரான் அரசின் ஆயுதக் கொள்கையை எதிர்த்து ஈரானின் தென்கிழக்கு பகுதியிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்தனர்.

காசியாபாத் எல்லையில் கனிமொழி, திருமாவளவன்...விவசாயிகளுக்கு நேரில் ஆதரவுகாசியாபாத் எல்லையில் கனிமொழி, திருமாவளவன்...விவசாயிகளுக்கு நேரில் ஆதரவு

2019 பிப்ரவரியில் ஈரான் துணை ராணுவத்தினர் வந்த பஸ் மீதும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பயங்கரவாதிகள் முகாம் மீது பிப்ரவரி 02 ம் தேதி தங்கள் படைகள் துல்லிய தாக்குதல் நடத்தி, இரண்டரை ஆண்டுகளாக பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கள் நாட்டு வீரர்களை மீட்டுள்ளதாக ஈரான் படைகள் தெரிவித்துள்ளன.

English summary
Iran has reportedly conducted a 'surgical strike' in Pakistan this week and rescued its imprisoned men from the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X