For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சவுதி அரேபியா எண்ணை சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்.. முஷ்டியை முறுக்கும் அமெரிக்கா

Google Oneindia Tamil News

Recommended Video

    United States was prepared to respond to the devastating attacks in Saudi Arabia

    சவுதி: சவுதி அரேபியாவில் இரண்டு எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான பேரழிவுகரமான தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். அதே நேரம், இந்த தாக்குதலுக்கு, ஈரான் தான் காரணம் என்ற அமெரிக்க குற்றச்சாட்டுகளை அந்த நாடு நிராகரித்தது.

    குற்றவாளியை நாங்கள் அறிவோம் என்று நம்புவதற்கு வலுவான காரணங்கள் உள்ளன, என்று டிரம்ப் நேற்று ஒரு ட்வீட்டில் கூறியிருந்தார்.

    Iran denies role in Saudi Arabia attacks

    அதேநேரம், டிரம்ப் ஈரான் பெயரை குறிப்பிடவில்லை, என்று வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்தார். ராணுவ பதிலடியை பற்றி சிந்திக்கிறாரா ட்ரம்ப் என்றும் குறிப்பிடவில்லை.

    "இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்று சவுதி அரேபியா நம்புகிறது என்று அவர்களிடமிருந்து கேட்க காத்திருக்கிறோம்" என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    56 இன்ஞ் மார்பால் 74 வயதை தடுத்து நிறுத்தவே முடியாது.. கார்த்தி சிதம்பரம் சுளீர்56 இன்ஞ் மார்பால் 74 வயதை தடுத்து நிறுத்தவே முடியாது.. கார்த்தி சிதம்பரம் சுளீர்

    டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் பாதுகாப்பு செயலாளர் மார்க் எஸ்பரை சந்தித்து ஆலோசித்துள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. சவுதி என்ன சொல்லப்போகிறது என்பதை பொறுத்துதான், அமெரிக்காவின் நடவடிக்கை தொடங்கும் என்று தெரிகிறது.

    சவுதி அரசுக்கு சொந்தமான எண்ணை சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்குப் பின்னர் முதல் முறையாக எண்ணெய் விலைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை உயர்ந்தது. ப்ரெண்ட் கச்சா விலை18 சதவீதம் உயர்ந்து, பிறகு, 12 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

    ஈரானுடன் தொடர்புள்ள ஹவுத்திகள் குழு, கிழக்கு சவுதி அரேபியாவில் உள்ள எண்ணை கிணறுகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பி தாக்குதல் நடத்தியதாக கூறி, அதற்கு பொறுப்பேற்றனர்.

    அமெரிக்க அரசின், அனுமானம் என்னவென்றால், தாக்குதல்கள் யேமனில் இருந்து வெளிவரவில்லை, அதாவது ஹவுத்திகள் தாக்குதல்களில் ஈடுபடவில்லை என்பதுதான். அந்த நம்பிக்கைக்கு காரணம் தாக்குதலின் தன்மைதான் என்கிறார் அமெரிக்க அதிகாரி ஒருவர்.

    டிரம்ப் நிர்வாகம் ஈரானை தனிமைப்படுத்துவதை அதன் வெளியுறவுக் கொள்கையின் முக்கியமானதாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    US President Donald Trump said Sunday that the United States was prepared to respond to the devastating attacks on two oil installations in Saudi Arabia that halved the state oil company's production output.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X