For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவ தளபதி கொலை வழக்கு.. அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: ஈரான் ராணுவ தளபதியை கொல்வதற்கு அமெரிக்காவுக்கு உளவு பார்த்த நபருக்கு மரண தண்டனையை ஈரான் நிறைவேற்றி உள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்காவின் விமான படை நடத்திய தாக்குதலில ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

 Iran executes man convicted of spying on US-slain general Qassem Soleimani

இந்நிலையில் காசிம் சுலைமானி கொலை வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அமெரிக்க உளவு அதிகாரிகள் உள்பட 30 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களை கைது செய்யவும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் ஈரானின் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவராக விளங்கிய ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்வதற்கு அமெரிக்காவிள் உளவு அமைப்பான சிஐஏவுக்கு தகவல் கொடுத்ததாக மவ்சாவி மஜித் என்பவரை கடந்த மாத இறுதியில் ஈரான் போலீசார் கைது செய்தனர். மவ்சாவி மஜித் மீது ஈரானின் ராணுவ ரகசியங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் உளவு அமைப்புகளுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் அவருக்கு ஈரான் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.ஒரு நாள் பாதிப்பில் இந்தியா 2வது இடம், ஒரு நாள் அதிக மரணத்திலும் 2வது இடம்.. டாப் 10 நாடுகள்.

இதையடுத்து குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட மவ்சாவி மஜித்துக்கு திங்கள்கிழமை (நேற்று) மரண தண்டனையை (தூக்கிலிட்டு) ஈரான் நிறைவேற்றியது. இதனை ஈரான் அரசு உறுதி செய்துள்ளது. ராணுவ தளபதி. காசிம் சுலைமானி கொல்லப்பட்ட விவகாரத்தில் முதல் முறையாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.

English summary
Iran executed a man convicted of providing information to the United States and Israel about a prominent Revolutionary Guard general Qassem Soleimani later killed by a U.S. drone strike
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X