For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈராக்கில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. கட்டிடங்கள் தரைமட்டம்

ஈரான் நாட்டின் கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

டெஹ்ரான் : ஈரான் நாட்டின் கெர்மன் பகுதியில் பல இடங்களில் இன்று மாலை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரான் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கெர்மன் மாகாணத்தின் பல பகுதிகளில் இன்று நில அதிர்வு உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

Iran Hit by Earthquake on today Evening and causalities not reported yet

இந்த நில அதிர்வால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதால் சேதம் அதிகமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதேபோல நேற்று ஈரானின் மேற்கு பகுதியில் 5.4 என்ற அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதே பகுதியில் கடந்த மாதம் 7.4 என்கிற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில அதிர்வால் 530 பேர் பலியாகி உள்ளனர். ஈரானில் சமீபகாலமாக தொடர்ந்து நில அதிர்வுகள் நிகழ்வதால் அங்கு பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஈரான் அதிபர் ஹாசன் ரோஹ்ஹானி வெளியிட்டுள்ள அறிக்கையில், நில அதிர்வால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்கும்படியும், உடனடியாக பாதித்த பகுதிகளுக்கு நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் தெரிவித்து உள்ளார்.

English summary
Iran Hit by powerful Earthquake on today Evening and causalities not reported yet .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X