For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விடாமல் துரத்தும் ஈரான்.. சீறிப்பாய்ந்த 3 ஏவுகணை.. அமெரிக்க தூதரகம் அருகே தாக்குதல்.. பகீர்!

ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Iran hits on the US embassy in iraq

    டெஹ்ரான்: ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மூன்று ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தி உள்ளது.

    ஈரான் - அமெரிக்கா இடையில் மீண்டும் போர் வருவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. சில நாட்களாக இரண்டு நாடுகளுக்கு இடையிலான சண்டை பெரிதாகாமல் அமைதியாக இருந்தது. நேற்று இரவு இந்த சண்டை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    கடந்த சில வாரம் முன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குவாஸம் சுலைமானி இந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது.

    மோசமான தாக்குதல்

    மோசமான தாக்குதல்

    அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது. அமெரிக்காவின் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது ஜனவரி 3ம் தேதி. இந்த தாக்குதலில் உக்ரைன் விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனால் 170 அப்பாவி பொதுமக்கள் பலியானார்கள். இந்த தாக்குதலை தொடர்ந்து ஈரான் வரிசையாக இரண்டு முறை அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தியது.

    ஈரான் எப்படி

    ஈரான் எப்படி

    மீண்டும் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் அருகே இரண்டு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. ஆனால் இந்த இரண்டு தாக்குதலிலும் எந்த விதமான உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஈரானின் புதிய குவாட்ஸ் படை தளபதியாக இஸ்மாயில் குவானி அமெரிக்காவை கண்டிப்பாக பழி வாங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இவர் கொல்லப்பட்ட தளபதி சுலைமானிக்கு மிகவும் நெருக்கமானவர். இதனால் அமெரிக்காவை தாக்க அவர் உறுதியாக உள்ளார்.

    எப்படி நடந்தது

    எப்படி நடந்தது

    இந்த நிலையில் ஈராக்கில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் நாட்டு விமானப்படை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. மூன்று ஏவுகணைகளை வீசி இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. ஈராக்கில் பாக்தாத்தில் உள்ள தூதரகம் ஆகும் இது. இந்த தாக்குதல் நடந்த போது, அங்கு அமெரிக்க அதிகாரிகள் யாரும் இல்லை. போர் பதற்றம் காரணமாக இந்த தூதரக அதிகாரிகள் எல்லோரும் ஏற்கனவே அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

    தூதரக அதிகாரிகள்

    தூதரக அதிகாரிகள்

    ஆனாலும் அங்கிருந்த தூதரக அதிகாரி ஒருவர் காயம் அடைந்துள்ளார். மொத்தம் ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகளில், ஒன்று தூதரகம் அருகே இருக்கும் காபி ஷாப் மீது விழுந்துள்ளது. மீதமுள்ள இரண்டு ஏவுகணைகள், தூதரகம் அருகே இருக்கும் இரண்டு கட்டிடங்கள் மீது விழுந்துள்ளது. ஆனால் எந்த ஏவுகணையும் தூதரகம் மீது விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அமெரிக்கா எப்படி பதிலடி கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    Iran hits 3 missiles attack on the US embassy in Iraq yesterday night.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X