For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிராபிக்... பூகம்ப அபாயம்... மக்கள் தொகைப் பெருக்கம் - தலைநகரை மாற்றும் திட்டத்தில் ஈரான்

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: தலைநகர் டெஹ்ரானில் அதிகரித்து வரும் மக்கட்தொகைப் பெருக்கத்தால் வாகன நெரிசல் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு உருவாகி உள்ளது. மேலும், தெஹ்ரானுக்கு பூகம்ப எச்சரிக்கையும் விடுக்கப் பட்டுள்ளது. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு தனது தலைநகரை மாற்றி விடலாமா என்னும் யோசனையில் உள்ளது ஈரான் அரசு.

பொதுவாக தலைநகரில் வேலை தேடி மக்கள் குவிவது வழக்கமான ஒன்று தான். அந்தவகையில் கடந்த 10 ஆண்டுகளில் ஈரான் தலைநகரான டெஹ்ரானில் மக்கட்தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளதாம்.

எனவே, தனது தலைநகரை யெஹ்ரானில் இருந்து வேறு நகருக்கு மாற்றலாமா என தீவிரமாக ஆலோசித்து வருகிறதாம் ஈரான் அரசு.

வேலைவாய்ப்பு தேடி....

வேலைவாய்ப்பு தேடி....

ஈரான் தலைநகரான டெஹ்ரானில் தற்போது 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வேலைவாய்ப்பிற்காக வந்து குடியேறியவர்கள் ஆவர்.

அதிகரித்த குற்றங்கள்....

அதிகரித்த குற்றங்கள்....

அதிக மக்கள் தொகை பெருக்கம் காரணமாக போக்குவரத்து நெரிசலும், குற்றங்களும் அந்நகரில் பெருகி விட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இந்நகரின் சுற்றுச் சூழலும் மாசுபாடு அடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3 மடங்கு அதிகரிப்பு....

3 மடங்கு அதிகரிப்பு....

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் டெஹ்ரானில் மக்கள் தொகை 3 மடங்கு அதிகரித்துள்ளதாம். இதனால், அந்நகர் போக்குவரத்து நெரிசலால் திக்கு முக்காடி வருகிறது.

நெருக்கடியில் அரசு...

நெருக்கடியில் அரசு...

மேலும், டெஹ்ரானில் எதிர்காலத்தில் பூகம்பரம் வரலாம் என்ற எச்சரிக்கையும் வானிலை மையத்தால் அளிக்கப் பட்டுள்ளதால் தலைநகரைக் காக்கும் பொருட்டு முக்கிய முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஈரான் அரசு உள்ளது.

2 ஆண்டுகளில்....

2 ஆண்டுகளில்....

எனவே தலைநகரை தடெஹ்ரானில் இருந்த வேறு நகருக்கு மாற்ற ஈரான் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஈரான் பாராளுமன்றம் பரிசீலித்து வருகிறது. எம்.பி.க்களிடம் கருத்தை கேட்டுள்ளது. 2 ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு ஈரான் தலைநகரம் வசதி வாய்ப்புகள் நிறைந்த வேறு நகருக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

English summary
The Iranian parliament has voted to consider a proposal to pick another city as the nation's capital, potentially moving the seat of government from the overcrowded Tehran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X