For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்காகாரன் அடிக்க வர்றான்.. ஓடி வாங்கடா பசங்களா.. தீவிரவாதிகளுக்கு ஈரான் ரகசிய அழைப்பு!

அமெரிக்காவிற்கு எதிரான பிரச்சனையில் போராளி குழுக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஈரான் பயன்படுத்த போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    தூதரக பணியாளர்கள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா உத்தரவு!

    டெஹ்ரான்: அமெரிக்காவிற்கு எதிரான பிரச்சனையில் போராளி குழுக்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை ஈரான் பயன்படுத்த போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

    ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது.

    மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இங்கு போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

    தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!தொடங்கியது வர்த்தகப் போர்.. அமெரிக்காவை எதிர்க்க துணிந்த சீனா.. இன்னும் இதெல்லாம் நடக்குமாம்!

     என்ன மிரட்டல்

    என்ன மிரட்டல்

    இதனால் ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூட போவதாக அறிவித்தது. ஹோர்முஸ் ஜலசந்தி வழியேதான் மத்திய கிழக்கு நாடுகள் எண்ணெய் வர்த்தகம் செய்கிறது. அதன்பின் சவுதி, அமீரகம் ஆகிய நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் மர்மமான முறையில் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்குதலுக்கு உள்ளது.

     ஈரான்தான் காரணமா?

    ஈரான்தான் காரணமா?

    இதற்கு ஈரான்தான் காரணம் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவின் போர் கப்பல்கள் ஈரானுக்கு எதிராக பெர்ஷியன் கடலுக்குள் நுழைந்து இருக்கிறது. ஆனால் இந்த போர் கப்பல்கள் எந்த விதமான பிரச்சனையும் இன்று பெர்ஷியன் கடலுக்குள் நுழைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இது ஈரானை தற்போது அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

     தீவிரவாத குழு உதவி

    தீவிரவாத குழு உதவி

    தற்போது ஈரான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத குழுக்களிடம் உதவி கேட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது ஈரான் இந்த போரில் நேரடியாக ஈடுப்படாமல், தீவிரவாத இயக்கங்களை பயன்படுத்த போவதாக அமெரிக்கா மற்றும் சவுதி நாளிதழ்கள் கட்டுரைகள் வெளியிட்டு இருக்கிறது.

     ஷியா நாடு உரிமை

    ஷியா நாடு உரிமை

    ஈரான் ஒரு ஷியா நாடு. அதேபோல் நிறைய போராளி குழுக்கள் ஷியா பிரிவை சேர்ந்தவை. இதனால் இந்த குழுக்கள் ஈரானுக்கு உதவியாக இருக்கும் என்று கூறுகிறார்கள். இந்த குழுக்களை வளர்த்து எடுப்பதே ஈரான்தான் என்று புகார் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    திட்டம்

    திட்டம்

    பொதுவாக ஆங்கிலத்தில் proxy war என்ற வார்த்தை இருக்கிறது. அதன்படி ஒரு போருக்கு ஒரு நாடு அழைப்பு விடுக்கும். ஆனால் போருக்கு அழைப்பு விடுக்கும் இந்த நாடு போரில் கலந்து கொள்ளாது. ஏதாவது ஒரு நாட்டிற்கோ, குழுவிற்கோ அந்த நாடு உதவி மட்டும் செய்யும். அப்படித்தான் ஈரான் இந்த போராளி குழுக்களை வைத்து proxy war நடத்த திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள்.

     ராணுவ படை சந்திப்பு

    ராணுவ படை சந்திப்பு

    இதற்காக ஈரானின் ராணுவ படைகளில் ஒன்றான குவாட்ஸ் படையின் தலைவர் சுலைமானி போராளி குழுக்களை சந்தித்து பேசி இருக்கிறார். அதன்படி, அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளுக்குள் புகுந்துவிட்டது. உடனே போருக்கு தயாராக இருங்கள், என்று எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. இதனால் தற்போது எண்ணெய் வள நாடுகளுக்கு இடையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    English summary
    Iran officials meet Militants in the Middle East calls for Proxy war against the USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X