For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரசு அறிவித்ததைவிட 3 மடங்கு அதிக பலி.. அதிர வைக்கும் கொரோனா புள்ளி விவரம்.. அம்பலமான ஈரான்

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானின் கொரோனா பலி எண்ணிக்கை அரசு அறிவித்ததைவிட சுமார் 3 மடங்கு அதிகம் என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. 7 நிமிடங்களுக்கு ஒரு கொரோனா நோயாளி அங்கு பலியாவதாக கூறப்படுகிறது.

கொரோனா பரவலால் கொத்துக் கொத்தாக பலி எண்ணிக்கை அதிகரித்த நாடுகளில் ஒன்றுதான் ஈரான். ஆனால் கடந்த பல வாரங்களாக ஈரான் வெளியிடும் பலி எண்ணிக்கையை வைத்து பார்த்தால், ஆரம்ப கட்ட பாதிப்பு குறைந்துவிட்டதாக தோன்றும். உண்மை அதுவல்ல.

பிபிசி ஊடகம், அரசு ஆவணங்களை பரிசோதித்து பார்த்து, இந்த உண்மையை வெளிக் கொண்டு வந்துள்ளது.

கொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம் கொரோனா வைரஸின் தோற்றம்.. சீனாவில் விசாரணையை முடித்த ஹு குழு.. மீண்டும் வுகான் செல்ல திட்டம்

கொரோனா பலி

கொரோனா பலி

ஈரான் அரசு அறிவித்த கொரோனா பலி எண்ணிக்கை, 17,000. ஆனால், ஆவணங்கள்படி, 42,000 என்ற அளவுக்கு கொரோனா பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜனவரி 22ம் தேதி ஈரானில் கொரோனாவுக்கு, முதல் முறையாக ஒருவர் பலியாகியுள்ளார். ஆனால் அரசு அதற்கு அடுத்த மாதம்தான், முதல் பலி நிகழ்ந்ததாக கூறியுள்ளது.

அரசு புள்ளி விவரம்

அரசு புள்ளி விவரம்

மேலும், ஜூலை 22ம் தேதி நிலவரப்படி, ஈரானில், 451,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களாம். ஆனால் அரசு புள்ளி விவரத்தில் இதற்கும் பாதி பேர்தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்களை தள்ளி வைத்துவிட்டு பார்த்தால் கூட, வளைகுடா நாடுகளில், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது ஈரான்தான்.

செயற்கைக்கோள் படம்

செயற்கைக்கோள் படம்

ஈரானின் கோம் நகரத்தில், பெரிய அளவுக்கு, உடல்கள் புதைக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படம் முன்பு ஒருமுறை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், பலி எண்ணிக்கையை, ஈரான் மறைத்த தகவல் தற்போது வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோம் நகரம்

கோம் நகரம்

பிபிசி டேட்டாப்படி பார்த்தாலும், கோம் நகரம்தான், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு, 1000 வீடுகளில் ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள் கொரோனாவால் பலியாகியுள்ளனர். அந்த நகரில், 1419 பேர் பலியானதாக பிபிசி டேட்டா தெரிவிக்கிறது.

மருத்துவமனை

மருத்துவமனை

கடந்த ஏப்ரல் மாதம் சமூக வலைத்தளங்களில் உலவிய ஒரு வீடியோவில், கோம் நகரில், உள்ள மருத்துவமனையொன்றின், பிணவறையில், சடலங்கள் அதிகம் கிடத்தப்பட்டு கிடந்தது தெரியவந்தது. அது ஐந்தாறு, நாட்களுக்கு, அங்கேயே கிடந்ததாக வீடியோவில் பேசிய மருத்துவ பணியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

அதிபர் வார்னிங்

அதிபர் வார்னிங்

ஈரான் அதிபர், ஹசன் ரூஹானி, சுகாதார அமைச்சக ஆய்வை மேற்கோள் காட்டி, நாட்டில் 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியிருந்தார். மேலும் 35 மில்லியன் பேர் அடுத்தடுத்த மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றும் அபாயத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Recommended Video

    Barakah Nuclear Power Plantக்கு ஆதரவும் எதிர்ப்பும்! என்ன நடக்கிறது?

    English summary
    It has been revealed that the death toll in Iran's coronavirus is about 3 times higher than the government announced. A corona patient is said to have died there in every 7 minutes.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X