For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது நிலநடுக்கம் அல்ல.. அணு ஆயுத சோதனையால் உண்டான அதிர்வு.. ஈரான் மீது புகார் வைக்கும் வல்லுநர்கள்!

ஈரானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? | Iran's earthquake happened maybe because of Atom Bomb test

    டெஹ்ரான்: ஈரானில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கம் அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் சந்தேகிக்கிறார்கள்.

    ஈரான் - அமெரிக்கா இடையில் போர் வருவதற்கான சூழ்நிலைகள் நிலவி வருகிறது. அமெரிக்கா விலகிச் சென்றாலும் ஈரான் கண்டிப்பாக அமெரிக்காவை தாக்கும் திட்டத்தில் இருக்கிறது.

    அதன்படி நேற்று ஈராக்கில் இருக்கும் அமெரிக்காவின் 2 விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. மொத்தம் 12 ஏவுகணைகளை ஈரான் ஏவியுள்ளது. மொத்தம் இரண்டு ராணுவ தளங்கள் இப்படி தாக்கப்பட்டுள்ளது.

    உயிர் தப்பிய பல நூறு வீரர்கள்.. அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. ஈரான் ஏமாந்த கதை! உயிர் தப்பிய பல நூறு வீரர்கள்.. அமெரிக்காவிற்கு ஈராக் கொடுத்த சீக்ரெட் மெசேஜ்.. ஈரான் ஏமாந்த கதை!

    ஈரான் போர்

    ஈரான் போர்

    ஈரானில் போர் ஏற்படுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டு இருக்கும் நிலையில்தான் அங்கு நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.7 ரிக்டர் அளவில் பதிவானது. ஈரானில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கிய சில நிமிடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    என்ன நிலநடுக்கம்

    என்ன நிலநடுக்கம்

    இந்த நிலநடுக்கம் ஈரானில் இருந்து தெற்கு பகுதியில் போர்சாஜன் பகுதியில் உள்ள புஷ்ஹேர் அணுமின் நிலையத்தில் இருந்து 17 கிமீ தூரத்தில் ஏற்பட்டது. இதனால் யாரும் உயிர் இழக்கவில்லை. அதேபோல் இதனால் இவ்வளவு சேதங்கள் ஏற்பட்டது என்பது குறித்தும் விவரம் வெளியாகவில்லை.

    அணுமின் நிலையம்

    அணுமின் நிலையம்

    அணுமின் நிலையம் அருகே இப்படி ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டு இருப்பது உலக நாடுகளை நிறைய சந்தேகத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த நிலநடுக்கம் உண்மையில் நிலநடுக்கம் கிடையாது. இது அணு ஆயுத சோதனை காரணமாக ஏற்பட்ட அதிர்வு என்று சிலர் கூறுகிறார்கள். அமெரிக்காவில் இருக்கும் பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் இது தொடர்பாக சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

    பொதுவாக எப்படி

    பொதுவாக எப்படி

    பொதுவாக அணு ஆயுத சோதனைகள் அணு மின் நிலையத்திற்கு அருகே நடக்கும். ரஷ்யாவின் சோதனைகள் பெரும்பாலும் இப்படித்தான் நடந்துள்ளது. அதேபோல்தான் தற்போது ஈரானும் அணு ஆயுத சோதனையை அணுமின் நிலையம் அருகிலேயே நடத்தி உள்ளது, என்கிறார்கள்.

    என்ன சோதனை

    என்ன சோதனை

    இந்த சோதனையால்தான் நேற்று அமெரிக்க அதிபர் பெரிதாக ஈரானுக்கு எதிராக குரல் கொடுக்காமல் பின் வாங்கினார். ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்காமல் பின் வாங்கினார் என்று கூறுகிறார்கள். ஈரானின் பலம்தான் அமெரிக்காவின் அமைதிக்கு காரணம் என்கிறார்கள். இதனால் ஈரானிடம் உண்மையில் அணு ஆயுதங்கள் வந்துவிட்டதா என்று சந்தேகம் எழுந்துள்ளது.

    English summary
    Iran's earthquake happened maybe because of Atom Bomb test - Says expert.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X