For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

படைகளை குவித்து வருகிறது.. உளவுத்துறையும் எச்சரிக்கை தந்தது.. ஈரான் செயலால் பென்டகன் கடும் ஷாக்!

ஈரான் தங்கள் நாட்டின் எல்லையில் படைகளை குவித்து வருகிறது, ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    USA Vs Iran: 1 லட்சத்து 20 ஆயிரம் ராணுவ படைகளை சவுதிக்கு அனுப்பும் டிரம்ப்- வீடியோ

    டெஹ்ரான்: ஈரான் தங்கள் நாட்டின் எல்லையில் படைகளை குவித்து வருகிறது, ஈரான் முக்கியமான தாக்குதலுக்கு திட்டங்களை வகுத்து வருவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.

    ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஈரானை அமெரிக்கா மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து தனித்து விட நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அமெரிக்கா ஒரு வகையில் வெற்றிபெற்றுவிட்டது என்றும் கூறலாம்.

    முதலில் ஈரானிடம் இருந்து உலக நாடுகள் எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா தடை செய்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்த காரணத்தால் அங்கு உள்நாட்டு போர் பதற்றம் ஏற்பட்டு இருக்கிறது. ஆம் அங்கு மக்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள்.

    என்ன போர்

    என்ன போர்

    ஈரான் நாட்டில் அதிபர் ஹசன் ரவுஹானிக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த ஒரு மாதமாக கடுமையாக போராடி வருகிறார்கள். ஈரான் அதிபர் ஹசன் ரவுஹானி மீது அந்நாட்டு மக்கள் பல்வேறு விஷயங்களுக்காக கோபத்தில் இருக்கிறார்கள். அதில் முதல் விஷயம், அதிபர் ஹசன் ரவுஹானி ராணுவத்தின் மீது செலுத்தும் கவனத்தில் துளி கூட மக்கள் நலத்திட்டம் மீது செலுத்துவதில்லை.

    என்ன பொருளாதாரம்

    என்ன பொருளாதாரம்

    அங்கு நாளுக்கு நாள் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்து வருகிறது, மக்கள் கடும் வறுமையில் உள்ளனர், என்று புகார் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கெல்லாம் காரணமாக சவுதி உள்ளிட்ட சில மத்திய கிழக்கு நாடுகளும், அமெரிக்காவும்தான் என்று ஈரான் நினைக்கிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இது தொடர்பாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதில், ஈரான் விரைவில் முக்கியமான தாக்குதல்களை நடத்த வாய்ப்புள்ளது. ஈரான் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த வாய்ப்பு இருக்கிறது. இதற்காக ஈரான் தீவிரமாக தயாராகி வருகிறது.

    படைகள் குவிப்பு

    படைகள் குவிப்பு

    இதற்காக ஈரான் தங்கள் படைகளை எல்லையில் குவித்து வருகிறது. நிறைய அளவில் அங்கு ஆயுதங்கள் இறக்கப்பட்டு வருவதாக எங்களுக்கு உறுதியான உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளது. ஆனால் ஈரான் ஏன் இப்படி செய்கிறது என்று முழுமையான விபரம் தெரியவில்லை. ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தி அருகேவும் படைகளை குவித்து வருகிறது.

    என்ன எச்சரிக்கை

    என்ன எச்சரிக்கை

    இது தொடர்பாக ஈரானுக்கு அமெரிக்க ராணுவம் சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் நாங்கள் சொல்வதை செவி மடுத்து கேட்கவில்லை. இன்னும் சில நாட்களில் ஈரானில் என்ன விதமான பிரச்சனை வேண்டுமானாலும் நடக்கலாம், அனைத்திற்கும் அமெரிக்க படைகள் தயாராக இருக்கிறது என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

    English summary
    Anything Can happen: Iran started moving its troops says US Pentagon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X