For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு- பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரிப்பு

Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது.

Recommended Video

    Iran Vice President has become infected with the coronavirus|ஈரான் துணை அதிபருக்கு கொரோனா பாதிப்பு

    சீனாவில் டிசம்பர் மாதம் முதல் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவி வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவில் மட்டும் இதுவரை சுமார் 2,800 பேர் பலியாகி உள்ளனர்.

    Iran Vice President Masoumeh Ebtekar Tests Positive for Coronavirus

    சீனாவை தவிர்த்து சிங்கப்பூர், தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் பரவியுள்ளது. ஈரானில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹரிச்சி அண்மையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

    இந்நிலையில் ஈரானின் துணை அதிபர் மசூமே எப்டருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஈரானில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனோ வைரஸ் பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    சீனாவை தவிர்த்து வெளிநாடுகளில் கொரோனா வைரஸ் ஈரானில்தான் அதிகம் பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Iran Vice President Masoumeh Ebtekar has become infected with the coronavirus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X