For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு இஸ்ரேல் காரணம்-பழிவாங்கியே தீருவோம்: ஈரான் ஆவேசம்

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: அணு ஆயுத விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலைக்கு அமெரிக்காவின் கூலிப்படையாக செயல்படும் இஸ்ரேல்தான் காரணம்; இந்த படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரானின் அணு ஆயுத மூளையாக செயல்பட்டவர் விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதே. ஈரானின் அப்சார்ட் நகரத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலை செய்யப்பட்டார்.

Iran vows to avenge nuke scientist Mohsen Fakhrizadeh assassination

இந்த படுகொலைக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி கொமேனி கூறுகையில், நிச்சயமாக இந்த படுகொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கூறுகையில், அமெரிக்காவின் கூலிப்படையாக இஸ்ரேல் செயல்பட்டு விஞ்ஞானி மொஹ்சென் ஃப்க்ரிசாதேவை படுகொலை செய்திருக்கிறது. இந்த படுகொலைக்கு பழிவாங்கியே தீருவோம். இதனால் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் முடங்கிப் போகாது என கூறியுள்ளார்.

71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி71-வது மன் கி பாத் வானொலி நிகழ்ச்சியில் இன்று உரையாற்றுகிறார் பிரதமர் மோடி

மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலையைத் தொடர்ந்து அமெரிக்கா- ஈரான் உறவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் ராணுவ தளபதி சுலைமானி, அமெரிக்காவின் ஏவுகணை தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா தூதரகம் உள்ளிட்டவை மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.

இதனால் அமெரிக்கா- ஈரான் இடையே போர் பதற்றம் உருவாகி இருந்தது. இந்த நிலையில் மொஹ்சென் ஃப்க்ரிசாதே படுகொலை நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Iran supreme leader Ayatollah Ali Khamenei has called for definitive punishment for the killing of Nuke Scientist Mohsen Fakhrizadeh.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X