For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளைகுடாவை சூழ்ந்த போர் மேகங்கள்.. ஈரானுக்கு பதிலடி கொடுக்க தயார் என சவுதி அறிவிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    சவுதியில் டிரோன் மூலம் தாக்குதல்.. எண்ணெய் உலகில் தொடங்கிய பதற்றம்- வீடியோ

    சவுதி: சவுதி அரேபியா - ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் வளைகுடா பகுதிகளில் பெரும் அச்சம் எழுந்துள்ளது.

    மத்திய கிழக்கு நாடான, ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை அமெரிக்கா ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பொருளாதார தடையும் விதித்தது. ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான உறவு ஏற்கனவே மோசமாக உள்ளது

    Iran wants war We are ready to do .. Saudi arabia annonced

    இந்நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் குழாய்களை ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குண்டுவீசி தகர்த்ததால் இரு நாடுகளுக்கும் இடையே உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

    இதனையடுத்து ஈரானை அச்சுறுத்தும் முயற்சியாக வளைகுடாவில் கூடுதல் படைகளை குவிக்க, அமெரிக்காவை சவுதி அரேபியா கேட்டுக்கொண்டுள்ளது. உச்சகட்ட பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் எதையும் சந்திக்க தயார் என சவுதி அரபியா கூறியுள்ளது.

    இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு அமைச்சரான அடல் அல் ஜூபெய்ர், சவுதி அரேபியா போரை விரும்பவில்லை. போரை தவிர்க்கவே விரும்புகிறது. ஆனால் ஈரான் போரை விரும்பும்பட்சத்தில் அதற்கு நாங்கள் தயாராகவே உள்ளோம்.

    Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம் Exit poll: அதிமுக கனவை சிதறடிக்கும் அமமுக.. இருவரும் இணைந்தால்.. திமுகவுக்கு சிரமம்

    ஈரானுக்கு எங்களின் முழுபலத்தை காட்டி பதிலடி கொடுக்க எந்நேரமும் ஆயத்தமாக உள்ளதாக குறிப்பிட்டார். நாட்டையும், நாட்டின் நலன்களையும் பாதுகாப்பது ஒன்றே எங்களது முக்கிய குறிக்கோள். அதற்காக எந்த எல்லைக்கும் நாங்கள் செல்வோம் என்றார்.

    ஈரானுடனான பிரச்சனை பற்றி விவாதிக்க வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில், அரபு லீக் ஆகியவற்றின் அவசரக் கூட்டத்திற்கும் சவுதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது. வளைகுடாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியாவில் தேர்தல் முடிந்துவிட்டதால் இனி பெட்ரோல் டீசல் விலை கடுமயாக உயர வாய்ப்பு உள்ளது.

    English summary
    Saudi Arabia-Iran has increased fears of war, the Gulf fear has risen. The relationship between Iran and Saudi Arabia is already worse
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X