For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு தோட்டா பாய்ந்தால் கூட போதும்.. அமெரிக்காவே பத்தி எரியும்.. ஈரான் வார்னிங்!

Google Oneindia Tamil News

டெஹ்ரான்: எங்களை தாக்க நினைத்தால் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் உடமைகள் தீக்கிரையாகும் என ஈரான் எச்சரித்துள்ளது.

ஈரான் அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் கடும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. அமெரிக்கா ஈரான் மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

Iran warns us and its allies

இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணை வாங்க கூடாது என அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு ஈரானும் தொடர்ந்து பல்வேறு வகைகளில் பதிலடி கொடுத்து வருகிறது இந்த நிலையில் ஈரானின் தெற்கு பகுதியில் உள்ள ஹோர்மஸ்கான் என்ற இடத்தில் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக தெரிவித்துள்ளது.

இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா தங்களது உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமேன்றே ஈரான் அரசு சுட்டு விழ்த்தியதாக குற்றம்சாட்டியது. இந்த சம்பவத்தை கண்டித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் "ஈரான் மிகப் பெரிய தவறு செய்து விட்டது" என டிவீட் செய்து ஈரானை எச்சரித்தார்.

மோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்! மோடி மீது தாக்குதல் நடத்துவோம்.. குருவாயூருக்கு வந்த பரபரப்பு மிரட்டல்!

இதனைத் தொடர்ந்து ஈரான் நாடு மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா உத்தரவிட்டது. இதையடுத்து இரு நாடுகளிடையே பதற்றம் அதிகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி நிமிடத்தில் தாக்குதலை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கான காரணத்தையும் டிரம்ப் டிவீட் செய்துள்ளார்.

அந்த பதிவில் ஈரான் அமெரிக்காவில் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதையடுத்து நாங்கள் 3 இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். அதன்பின்னர் ராணுவ உயர் அதிகாரியிடம் இந்த தாக்குதலில் எத்தனை மக்கள் இறப்பார்கள் என கேட்டேன். அதற்கு பதிலளித்த அவர் இதில் 150 பேர் பலியாவார்கள் என கூறினார். இதன் பின்னர் தாக்குதல் நடத்த 10 நிமிடங்களே இருந்த நிலையில், உடனடியாக நிறுத்த உத்தரவிட்டேன்.

இந்த விவகாரத்தில் நான் அவசரப்படப்போவதில்லை. ஏனென்றால் எங்கள் ராணுவம்தான் உலகிலேயே தலைச் சிறந்த ராணுவம். ஈரான், அமெரிக்காவுக்கு எதிராகவோ அல்லது மற்ற நாடுகளுக்கு எதிராகவோ அணு ஆயுதங்களை வைத்திருக்க முடியாது. என்று அந்தப் பதிவில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த உத்தரவிட்ட தகவல் தெரிந்ததும் ஈரான் கடும் கோபமடைந்துள்ளது. எங்கள் நாட்டின் மீது ஒரு தோட்டா பாய்ந்தால்கூட அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு சொந்தமான உடைமைகள் தீக்கிரையாகும் என ஈரான் கடுமையாக எச்சரித்துள்ளது.

English summary
We will torch USA and its allies if they dare to touch us, warns Iran.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X