For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பதில் சொல்ற அளவுக்கு வொர்த்தான ஆள் கிடையாது 'டிரம்ப்'.. ஜப்பான் பிரதமரிடம் சொன்ன ஈரான் தலைவர்

Google Oneindia Tamil News

தெக்ரான்: அமெரிக்க அதிபர் டொனலாட்டு டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தகுதியான ஆள் கிடையாது என ஈரான் நாட்டின் தலைவர் அலி காமேனி, ஜப்பான் பிரதமர் அபேயிடம் தெரிவித்தார். இதனால் பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்ட அமெரிக்கா அதிபர் டிரம்ப், ஈரான் தலைவரின் இந்த பேச்சால் கடும் ஆத்திரத்தில் உள்ளார்.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து உள்பட பல்வேறு வல்லரசு நாடுகளுடன் 2015ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டது. இத்துடன் பிரச்னை சரியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டிரம்ப் அணு ஆயுத ஒப்பந்தத்தில் விலகுவதாக அறிவித்தார்.

மேலும் அமெரிக்காவுக்கு ஈரான் அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி பொருளாதார தடைகளையும் விதித்தார். மேலும் அமெரிக்க போர்க்கப்பல்கள் பாரசீக வளைகுடா கடல் பகுதியிலும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

ஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர் ஏன் ஹெல்மட் போடல.. பைக்கில் நம்பர் பிளேட் எங்கே.. தெறிக்க விட்ட இளைஞர்.. மிரண்டு ஓடிய போலீஸ்காரர்

ஈரான் கடும் எச்சரிக்கை

ஈரான் கடும் எச்சரிக்கை

இதனால் அமெரிக்கா ஈரான் இடையே போர் மேகம் சூழ்ந்து பதற்றமான நிலை காணப்படுகிறது. இதனிடையே அமெரிக்கா உலகின் எந்த நாடும் ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என எச்சரித்து கெடு விதித்தது. இதனால் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த செயலால் ஆத்திரத்தில் உள்ள ஈரான், ஒருவேளை பாரசீக வளைகுடா பகுதியில் போர் ஏற்பட்டால், கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கிய வழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவோம் என எச்சரித்துள்ளது.

ஜப்பான் பிரதமர் முயற்சி

ஜப்பான் பிரதமர் முயற்சி

இதைடுத்து அமெரிக்கா, ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஜப்பான் இறங்கி உள்ளது. ஜப்பான் பிரதமர் ஷினஸோ அபே ஈரானில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது அந்த நாட்டின் உச்ச அதிகாரம் படைத்த மத தலைவரான அலி காமேனியை சந்தித்தார். முன்னாக அதிபர் ரௌஹானியையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை

பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை

இந்த சூழலில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்றும் மற்றவர்கள் தயாரா என்றும் டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளிக்கும் விதமாக டுவிட்டர் கருத்து பதிவிட்டுள்ள காமேனி, "ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவை சந்தித்து பேசினேன். அப்போது அவரிடம் நான் அமெக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு தகுதியான நபர் இல்லை என்றேன். மேலும் டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராக இல்லை என்றும் கூறினேன்" என்றார்.

ஈரான் அதிபர்

ஈரான் அதிபர்

இதனிடையே ஈரான் அதிபர் ரௌஹானி கூறுகையில், நாங்கள் அமெரிக்கா உள்பட எந்த நாட்டு மீதும் போர் தொடுக்க மாட்டோம். ஆனால் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் சும்மா இருக்க மாட்டோம்.தக்க பதிலடி கொடுப்போம் என்றார்.

English summary
Iranian leader Khamenei told Japanese PM Abe, US president Trump 'not worthy' for reply of trump message
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X