For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து... 66 பயணிகளும் பலி என அறிவிப்பு

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் மலைப்பாங்கான பகுதியில் விபத்துக்குள்ளாகியது. அதில் இருந்த 100 பயணிகள் பலியாகியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

தெஹ்ரான்: ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 66 பேருடன் யசூஜ் நகருக்கு சென்ற விமானம் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளானதில் அவர்கள் அனைவரும் பலியானதாக அறிவிக்கப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெஹ்ரானில் இருந்து யசூஜ் பகுதிக்கு 66 பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அது புறப்பட்ட 20 நிமிடங்களுக்கு ரேடாரை விட்டு விலகியுள்ளது. ரேடார் குறியீடுகளை வைத்து பார்க்கும் போது விமானம் அவசர அவசரமாக தரையிறங்கு முயற்சித்தது தெரியவந்தது.

Iranian passenger plane crash: 100 died?

எனினும ஜாக்ரோஸ் மலை பகுதியில் அது விழுந்து நொறுங்கியுள்ளது. அங்குள்ள விமானத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். விமானம் நொறுங்கி விழுந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் அங்கு ஆம்புலன்ஸ் வாகனங்களை நேரடியாக இயக்க இயலாத சூழல் உள்ளது.

விமானத்தில் பயணித்த 66 பேரும் இறந்துவிட்டனர் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஈரானின் மூன்றாவது மிகப் பெரிய விமான நிறுவனமான ஆசிமான் விமான நிறுவனத்தின் விமானம் விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Iranian passenger plane has crashed into the country’s Zagros mountains with 100 people on board.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X