For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி

ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளுக்கு ஒரே நாளில் தூக்கு.. ஈராக் அரசு அதிரடி

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரே நாளில் 12 தீவிரவாதிகளுக்கு தூக்கு தண்டனை- வீடியோ

    பாக்தாத்: ஈராக்கில் ஐஎஸ் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகள் ஒரே நாளில் அந்நாட்டு அரசால் தூக்கிலிடப்பட்டு இருக்கிறார்கள்.

    கடந்த வாரம் ஈராக்கின் பாதுகாப்பு படை மற்றும் போலீஸ் பிரிவை சேர்ந்த மொத்தம் 8 பேர் திடீர் என்று காணாமல் போனார்கள். இவர்கள் ஐஎஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது பின் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இவர்களை எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.

    Iraq executes 12 convicted ISIS terrorists in single as a revenge

    இந்த நிலையில், இவர்கள் 8 பேரும் கடந்த புதன்கிழமை கொல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்கள். இவர்கள் மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து ஈராக் பாதுகாப்பு குறித்து, அந்நாட்டு மக்கள் மிகவும் மோசமாக கருத்து தெரிவித்தனர்.

    அரசுக்கு எதிராக கோபமாக கருத்து தெரிவித்தனர். இதையடுத்து அந்நாட்டு பிரதமர் ஹைதர் அல் அபாதி உடனடியாக சில தீவிரவாதிகளுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளார். தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தீவிரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்ற சொன்னார்.

    அதன்படி நேற்று இரவு மொத்தம் 12 தீவிரவாதிகள் தூக்கிலிடப்பட்டனர். இவர்கள் பன்னிரண்டு பேரும் ஐஎஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள். 12 பேர் இப்படி ஒரே நாளில் தூக்கிலிடப்பட்டது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

    தீவிரவாதிகளுக்கு செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. 2003ல் ஈராக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டது. அதன்பின் 2004ல் மீண்டும் கொண்டு வரப்பட்டது. அதன்பின் நடத்தப்பட்ட பெரிய தண்டனை இதுதான் ஆகும்.

    English summary
    Iraq executes 12 convicted ISIS terrorists in single as a revenge of Murder of 8 security force people.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X