For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரிட்டனில் இரு வேறு நாகரிக நாணயங்கள் கண்டுபிடிப்பு: ரோமன், இரும்பு காலத்தை சேர்ந்தவை

Google Oneindia Tamil News

டெர்பிஷயர்: பிரிட்டனில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ரோமானியர்கள் கால நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

பிரிட்டனின் டெர்பிஷயர் பகுதியில் உள்ள குகை ஒன்றில் அகழ்வாராய்ச்சி நடைபெற்றது.

அதில் 2000 ஆண்டுக்களுக்கு முன்பான ரோமானிய மற்றும் இரும்பு கால நாணயங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

இரு வேறு நாகரிக நாணயங்கள்:

இரு வேறு நாகரிக நாணயங்கள்:

ஒரே பகுதியில் இருவேறு நாகரிகங்களைச் சேர்ந்த நாணயங்கள் கண்டறியப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

தொல்லியல் நிபுணர் மகிழ்ச்சி:

தொல்லியல் நிபுணர் மகிழ்ச்சி:

அகழ்வாராய்ச்சிக் குழுவில் இடம்பெற்றிருந்த தொல்லியல் நிபுணர் ராச்சேல் ஹால் இக்கண்டுபிடிப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

குகையில் கண்டுபிடிப்பு:

குகையில் கண்டுபிடிப்பு:

பொதுவாக ரோமானியர் காலத்து நாணயங்கள் சமதளமான பகுதிகளில்தான் அதிகளவில் கண்டறியப்படும். ஆனால் இந்தமுறைதான் இக்குகையில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

 சக்தி வாய்ந்த மனிதர்கள்:

சக்தி வாய்ந்த மனிதர்கள்:

இவை வர்த்தக ரீதியாக தயாரிக்கப்பட்ட நாணயங்கள் அல்ல. மிகவும் சக்திவாய்ந்த மனிதர்களாக மதிக்கப்படுபவர்களிடம் காணப்படும் நாணயங்கள் ஆகும் இவை.

மறைத்து வைக்கப்பட்டவை:

மறைத்து வைக்கப்பட்டவை:

மதிப்புமிக்க பொருட்களை மறைத்து வைப்பது போன்று இந்த நாணயங்களையும் பண்டைய ரோமானிய மக்கள் மறைத்து வைத்து இருக்கலாம் அல்லது எதிர்காலத்தில் இதன் மதிப்பு அதிகரிக்கும் என்றும் மறைத்து வைத்திருக்கலாம்.

தொடரும் அகழ்வாராய்ச்சி:

தொடரும் அகழ்வாராய்ச்சி:

ரோமானியர்கள் மற்றும் இரும்பு காலத்து நாணயங்களை சேகரிக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.தற்போது கிடைத்துள்ள நாணயங்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகம் மற்றும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

பொதுமக்கள் பார்வைக்கு:

பொதுமக்கள் பார்வைக்கு:

ஆய்வுகள் முடிந்த பிறகு இந்நாணயங்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பொதுமக்கள் பார்வைக்காக பக்ஸ்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் ராச்சேல்.

English summary
A precious hoard of Roman and Late Iron Age coins are discovered in a cave in Dovedale where they lay undisturbed for more than 2,000 years
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X