For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரம்ஜான் மாதத்தில் நோண்பு நேரத்தில் சாப்பிட்டதற்காக 5 பேர் படுகொலை - ஐஎஸ்ஐஎஸ் அட்டகாசம்

Google Oneindia Tamil News

பெய்ரூட்: ரமலான் நோன்பு மாதத்தில் உணவு உண்டதற்காக 5 பேரைக் கொடூரமாக கொலை செய்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் கொடூர நடைமுறைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் தற்போது நோன்பு இருக்காத 5 பேரை சித்ரவதை செய்து கொலை செய்துள்ளனர்.

IS crucifies five people for not fasting during Ramadan

சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், அல் மையடின் நகரத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று கொடூரமாக சிதைக்கப்பட்ட நிலையில் 5 உடல் கிடந்தது.

அவர்களின் கழுத்தில் கட்டபட்டிருந்த துண்டு சீட்டில் ரம்ஜான் மாதத்தில் நோன்பு கடைபிடிக்காததால் நாள் முழுவதும் சித்ரவதை செய்து பின்னர் 70 சவுக்கடிகள் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் தொடங்கியதிலிருந்து இதுவரை 3,027 பேர் கொல்லப்பட்டிருப்பதாக சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

English summary
The Islamic State (IS) has crucified five people in northeastern Syria for not fasting during the holy Islamic month of Ramadan, Syrian Observatory for Human Rights (SOHR) director Rami Abderrahman told EFE news agency on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X