For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண்களுக்கு எதிராக நூதனமாக பேஸ்புக் செய்த முறைகேடு.. பாய்ந்த வழக்கு.. என்ன கதை?

பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் எதுவும் பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் எதுவும் பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

பேஸ்புக் இந்த வருட தொடக்கத்தில் பயனாளிகளின் தகவல்களை திருடியதாக தகவல் வெளியானது. இது தொடர்பான வழக்கு பல நாடுகளில் இன்னும் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் தற்போது பேஸ்புக் புதிய சர்ச்சையில் சிக்கி உள்ளது. அதாவது வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களில் பெண்களுக்கு எதிராக பேஸ்புக் செயல்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

விளம்பரம் கொடுக்கலாம்

விளம்பரம் கொடுக்கலாம்

பேஸ்புக்கில் பொதுவாக யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து விளம்பரம் கொடுக்கலாம். ஒரு குறிப்பிட்ட தொகைக்கு இத்தனை பேருக்கு விளம்பரம் சென்று சேரும் வகையில் விளம்பரம் கொடுக்கலாம். இதற்காக பேஸ்புக் பல விதமான விதிகளை பின்பற்றி வருகிறது.

சர்ச்சை என்ன

சர்ச்சை என்ன

இந்த நிலையில் பேஸ்புக்கில் வரும் வேலைவாய்ப்பு விளம்பரங்கள் எதுவும் பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது மெக்கானிக், வீடு கட்டும்பணி உள்ளிட்ட வேலை தொடங்கி சில கணினி சார்ந்த பணிகள் குறித்த வேலை வாய்ப்பு விளம்பரங்கள் கூட பெண்களுக்கு காட்டப்படுவது இல்லை என்று சர்ச்சை எழுந்துள்ளது.

வழக்கு தொடுத்தனர்

வழக்கு தொடுத்தனர்

அமெரிக்காவின் ஓஹையோவை சேர்ந்த 3 பெண்கள் இதை கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். இதனால் இன்னும் சிலர் பேஸ்புக் மீது வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாய்ப்பு உள்ளது

வாய்ப்பு உள்ளது

இந்த நிலையில் இதில் இன்னொரு மாதிரியான கருத்தும் நிலவுகிறது. அதன்படி கடினமான வேலைகளை பேஸ்புக் பெண்களுக்கு மறைந்து இருக்கலாம். ஆனால் பெண்கள் மட்டுமே பார்க்கும் வேலைகளை பேஸ்புக் அவர்களுக்கு காட்டி இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுதான் பெண்கள் பார்க்கும் வேலை, பார்க்க கூடாது வேலை என்று பிரிக்க பேஸ்புக்கிற்கு யார் அதிகாரம் கொடுத்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

English summary
Case filed against Facebook in the US claiming that it is not showing Job advertisement to Women.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X