For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கானிமேட் நிலவின் கைங்கரியத்தால் ஒரு நிமிடம் "சந்திரமுகி"யாக மாறிய ஜூபிடர்!

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஜூபிடர் கிரகமானது, பெரிய கண்ணுடன் நம்மை உற்று நோக்கிப் பார்த்தால் எப்படி இருக்கும்... அதேபோல ஒரு "கண்"ணுடன் கூடிய ஜூபிடர் கிரகத்தை ஹப்பிள் தொலைநோக்கிப் படம் பிடித்து அனைவரையும் வியப்படைய வைத்துள்ளது.

நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி அனுப்பியுள்ள இந்தப் படத்தில் பெரிய கண்ணுடன், அதுவும் நமது பூமியைப் பார்ப்பது போன்ற தோற்றத்துடன் ஜூபிடர் கிரகம் காணப்பட்டது.

சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கிரகம் ஜூபிடர்தான். இதன் சமீபத்திய படம் ஒன்று பெரும் ஆச்சரியகரமானதாக உள்ளது.

ஜூபிடரில் புயல்:

ஜூபிடரில் புயல்:

ஜூபிடர் கிரகத்தில் வீசி வரும் புயலை ஹப்பிள் தொலைநோக்கி தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

கடந்து சென்ற நிலவு:

கடந்து சென்ற நிலவு:

இந்த நிலையில், அந்தப் புயல் அடித்து வரும் பகுதியை, ஜூபிடரின் நிலவான கானிமேட் கடந்து சென்றபோது, பெரிய கண் போன்ற தோற்றம் ஏற்பட்டது.

காணக்கிடைக்காத “கண்”:

காணக்கிடைக்காத “கண்”:

இதைத்தான் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது. பார்ப்பதற்கு பெரிய கண் போன்று இது காணப்படுகிறது. இது ஒரு அரிய காட்சியாகும். கிட்டத்தட்ட இந்த "கண்"ணின் விட்டமானது 10,000 மைல் ஆகும்.

மூன்றாவது கேமரா:

மூன்றாவது கேமரா:

இதுகுறித்து நாசா செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஹப்பிள் தொலைநோக்கியின் 3 ஆவது கேமரா இந்தப் படத்தை எடுத்துள்ளது.

புயல் பகுதியில் தோற்றம்:

புயல் பகுதியில் தோற்றம்:

கானிமேட் நிலவானது புயல் அடித்துக் கொண்டிருக்கும் பகுதியைக் கடந்தபோது ஒரு கண் போன்ற தோற்றம் ஏற்பட்டது. இதை ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பி வைத்துள்ளது.

தலை சுத்துதே:

தலை சுத்துதே:

ஜூபிடரின் தெற்கு கடகரேகைப் பகுதியில் இந்த புயல் பகுதி உள்ளது. இந்த புயலானது இன்று நேற்று அல்ல,, கடந்த 400, 500 ஆண்டுகளாக வீசிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடித்துப் புரட்டும் புயல்:

அடித்துப் புரட்டும் புயல்:

சூரிய மண்டலத்திலேயே நீண்டகாலமாக வீசி வரும் புயல் என்ற பெருமையும் இதற்கு உண்டு. 2 அல்லது 3 பூமி அளவிலான கிரகத்தை அடித்துப் புரட்டி விடும் அளவுக்கு சக்தி வாய்ந்தது இந்த புயல்.

வாயுக்களால் ஆன கிரகம்:

வாயுக்களால் ஆன கிரகம்:

மிகப் பெரிய கிரகம் ஜூபிடர் என்றாலும் கூட அதில் முழுக்க முழுக்க வாயுக்ள்தான் நிரம்பியுள்ளன. அதன் முழு விவரம் குறித்து தொடர்ந்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தபடி உள்ளனர். பூமியை விட ஜூபிடரானது 317 மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.

67 நிலவுகள்:

67 நிலவுகள்:

ஜூபிடருக்கு மொத்தம் 67 நிலவுகள் உள்ளன. அதில் நான்கு நிலவுகள் மிகப் பெரியவை. அவற்றுக்கு கலிலியன் நிலவுகள் என்று பெயர். கலிலியோ கலிலி இவற்றை 1610 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

கானிமேட் நிலாதான் அந்தக் கண்:

கானிமேட் நிலாதான் அந்தக் கண்:

இந்த நான்கு நிலவுகளிலும் மிகப் பெரியதுதான் தற்போது கண் போன்ற தோற்றத்தை ஏற்படுத்திய கானிமேட் நிலவாகும். இது மெர்க்குரி கிரகத்தை விட மிகப் பெரியதாகும்.

ஜூனோ விண்கலம்:

ஜூனோ விண்கலம்:

ஜூபிடரை மிக நெருக்கத்தில் ஆய்வதற்காக நாசா ஜூனோ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இது ஏவப்பட்டது. 2016 கடைசியில் அது ஜூபிடரை சென்றடையும்.

English summary
The stunning image of the solar system's biggest planet was captured by the Hubble Space Telescope as it tracked changes in Jupiter's immense Great Red Spot storm. As the shadow of the Jovian moon Ganymede swept across the center of the storm, it gave the giant planet the uncanny appearance of having a pupil in the center of a 10,000-mile-diameter "eye."
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X