For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

250 கிலோ எடை.. நடக்க முடியாத நிலை.. ஐஎஸ் பயங்கரவாதி அபு அப்துல் பாரி கைது.. ஈராக் அரசு அதிரடி

Google Oneindia Tamil News

பாக்தாத்: ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபு அப்துல் பாரி ஈராக்கில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது எடை 254 கிலோ இருந்ததால் அவரை காரில் அழைத்து செல்ல முடியாமல் லாரியில் அழைத்து சென்றனர்.

ஈராக் நாட்டில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் ஆதிக்கம் செலுத்தி பல பகுதிகளில் நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்குவதற்காகவே அமெரிக்க படைகள் முகாமிட்டு உள்ளன.

ஈராக்கில் செயல்பட்டு வரும் ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவராக முப்தி அபு அப்துல் பாரி செயல்பட்டு வந்தார். அவர் சுமார் 254 கிலோ எடை கொண்டவர். பாதுகாப்பு படையினருக்கு எதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்.

கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு கன்மேனுக்கு டோல்கேட்டில் என்ன வேலை.. துப்பாக்கி காட்டி மிரட்டினாங்க.. பாலபாரதி பகீர் குற்றச்சாட்டு

நீதிமன்றம்

நீதிமன்றம்

அவரை ஈராக் நாட்டின் பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஸ்வாட் குழு மொசூல் நகரில் கைது செய்தது. அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல காரில் ஏற்ற முடியவில்லை.

பாரி பிறப்பித்தார்

பாரி பிறப்பித்தார்

இதனால் பாதுகாப்பு படையினர் லாரியை வரவழைத்து அதில் அவரை ஏற்றிக் கொண்டு சென்றனர். ஐஎஸ் அமைப்பினருக்கு விசுவாசமாக செயல்படாத இஸ்லாமிய மத போதகர்களை கொல்வதற்கான உத்தரவுகளையும் பாரி பிறப்பித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர்

பாதுகாப்பு படையினர்

இத்தனை உடல் எடை கொண்ட பாரி லாரியில் கொண்டு செல்லப்பட்டதாக சொல்லப்பட்ட போதிலும் அவரால் நடக்கக் கூட முடியாததால் அவரை எப்படி லாரியில் ஏற்றினர் என்பது குறித்து பாதுகாப்பு படையினர் விளக்கமளிக்கவில்லை.

பாரி உத்தரவு

பாரி உத்தரவு

இவரது கைதை ஈராக் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு விவிலிய தீர்க்கதரிசி ஜோனா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட மசூதியை அழிக்க பாரி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

English summary
250 Kg weighing ISIS leader Abu Abdul Bari has been arrested in Iraq by Swat team.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X