For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"பிள்ளை"யைக் காணோமே - கவலையில் ஐரோப்பிய நாடுகள்!

Google Oneindia Tamil News

புளோரிடா: ஐரோப்பாவின் ஃபிளே விண்கலம் காணவில்லை என்று கூறப்படுகிறது. அந்த விண்கலத்திடமிருந்து கடந்த 11 நாட்களாக எந்த தகவலும் வரவில்லை. படு அமைதியாக இருப்பதால் அது செயலிழந்து விட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஃபிளே விண்கலமானது ஒரு ரோபாட்டிக் ஆய்வகமாகும். இது 67பி சுரயுமோவ் கெரசிமெங்கோ என்ற வால் நட்சத்திரத்தை ஆராய அனுப்பப்பட்டது. அந்த வால் நட்சரத்திலேயே இறங்கி அது சோதனையில் ஈடுபட்டு வந்தது.

தற்போது அது குறித்த தகவல் ஏதும் இல்லை.

Is Philae 'DEAD'?

எங்கே போனது...

கடந்த ஆண்டு 67 பி வால்நட்சத்திரத்தில் போய் இறங்கியது ஃபிளே. தற்போது அதனிடமிருந்து தகவல் வராததால் அது இடம் மாறியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனவே அதனுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தகவல் வரவில்லை...

இந்த விண்கலத்தை ஈரோப்பியன் ஸ்பேஸ் ஏஜென்சிதான் அனுப்பியிருந்தது. ஜூலை 9ம் தேதி முதல் ஃபிளே விண்கலத்திலிருந்து தகவல் ஏதும் வரவில்லையாம்.

சேதம்?

இது குறித்து திட்ட மேலாளர் ஸ்டீபன் உலமேக் கூறுகையில், "ஃபிளே விண்கலத்தின் சூரிய சக்தி பேனல்கள் பொசிஷன் மாறியிருப்பது போலத் தெரிகிறது. வால் நட்சத்திரத்திலிரு்து வெளியாகும் வாயுக்களால் இந்த மார்றம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் விண்கலத்தின் 2 டிரான்ஸிமிஷன் யூனிட்டுகளும் சேதமடைந்திருப்பது போலத் தெரிகிறது.

நம்பிக்கை...

தொடர்ந்து விண்கலத்திற்கு உத்தரவுகள் அனுப்பபப்பட்டு வருகின்றன. மீண்டும் தொடர்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். முன்பும் கூட இதே பிரச்சினை ஏற்பட்டு சரியாகியுள்ளது.

ரோசெட்டா...

தற்போது எங்களது குழு ரோசெட்டா என்ற இன்னொரு விண்கலத்தின் மீது கவனத்தைத் திருப்பியுள்ளது. இந்த விண்கலமானது அந்த வால் நட்சத்திரத்தைத் தொடர்ந்து பயணித்து வருகிறது"என்றார் அவர்.

ஃபிளே...

2004ம் ஆண்டு ரோசெட்டா விண்கலம் அனுப்பப்பட்டது. உண்மையில் இந்த விண்கலத்தில் வைத்துதான் ஃபிளே விண்கலம் ஏவப்பட்டிருந்தது.

6.4 பில்லியன் கி.மீ. தூரப்பயணம்...

வால் நட்சத்திரத்தில் ஃபிளே விண்கலம் இறங்கிய திசையில் ரோசெட்டா அந்த விண்கலத்தைப் பின் தொடர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 6.4 பில்லின் கிலோமீட்டர் தூரப் பயணத்திற்குப் பின்னர் ஃபிளே விண்கலமானது, வால் நட்சத்திரத்தில் இறங்கியது.

English summary
Philae has fallen 'silent' on the surface of comet 67P/Churyumov-Gerasimenko, concerned scientists have revealed. Scientists say the robotic lander may have shifted its position, making it harder to communicate with the Rosetta probe.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X