For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெற்றிக்கண்ணுடன் ஜெர்மனியில் குழந்தை பிறந்ததா?.. 17ஆம் நூற்றாண்டு முனிவர் கணித்தாரா?.. உண்மை என்ன?

Google Oneindia Tamil News

பெர்லின்: ஜெர்மனியில் 3 கண்களை கொண்ட குழந்தை ஒன்று பிறந்ததாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மை குறித்து இதுவரை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தி போலியாக இருக்கலாம் என தெரிகிறது.

சிவனுக்கு மூன்றாவதாக ஒரு கண் இருக்கும் என்றும் அந்த கண்ணை மட்டும் அவர் திறந்தால் உலகமே அழிந்துவிடும் என்று கூறுவதுண்டு. புராண படமான திருவிளையாடலில் ஒரு வசனம் வரும், அதில் சிவனின் பாட்டிலோ பொருளிலோ நக்கீரன் குற்றம் கண்டுபிடிப்பார். அதை ஏற்க மறுத்து சிவன் தனது நெற்றிக் கண்ணை திறப்பார்.

அப்போது நெற்றிக்கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே என நக்கீரன் கூறுவார். இவற்றை எல்லாம் படங்களில் பார்த்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.

சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி நேரத்தை வீணாக்க வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்சதிகாரர்களின் சமூக வலைதள வலைகளில் சிக்கி நேரத்தை வீணாக்க வேண்டாம்: திமுகவினருக்கு ஸ்டாலின் அட்வைஸ்

ஜெர்மனி

ஜெர்மனி

ஆனால் ஜெர்மனியில் நெற்றிக் கண்ணுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளதாகவும் அதுகுறித்த வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ யூடியூப், பேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் வைரலாகியுள்ளது. பொதுவாக இருக்கும் இரு கண்களுடன் நெற்றியிலும் ஒரு கண் இருப்பது போன்று உள்ளது.

வீடியோ

வீடியோ

இந்த வீடியோவை அனைவரும் ஷேர் செய்து வருகிறார்கள். அந்த குழந்தையின் பெயர் ஸேக் என யாரோ ஒரு பெண் அழைப்பது போல் உள்ளது. டிராலியில் குழந்தை உட்கார வைக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை உற்று நோக்கினால் அதன் நெற்றியில் 3ஆவதாக ஒரு கண் இருப்பது தெரிகிறது. அந்த குழந்தையின் இடது கண் எப்படி திரும்புகிறதோ அதே திசையில் நெற்றியில் உள்ள கண்ணும் திரும்புகிறது.

வீடியோ

வீடியோ

இது எடிட் செய்யப்பட்ட வீடியோவா என தெரிந்து கொள்ள வீடியோ எடிட்டர்களை கேட்ட போது இது போன்ற எடிட்டிங் எல்லாம் செய்வது மிகவும் சாத்தியம் என்றும் அவற்றை செய்வது மிகவும் சுலபம் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த வீடியோவை ஷேர் செய்யும் பலர் இந்தியாவில் 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முனிவர் ஒருவர் வெளிநாட்டில் 3 கண்களை கொண்ட குழந்தை பிறக்கும் என ஏற்கெனவே கணித்துள்ளதாக கூறுகிறார்கள். இதே முனிவர்தான் கொரோனா வைரஸ் வரும் என்பதையும் கணித்திருந்தாராம்.

உண்மைத்தன்மை

பிறவி குறைபாடு என சொல்லப்படும் கிரேனியோபேஷியல் டூப்ளிகேஷன் இருக்கிறதா என பார்த்து அதன் மூலம் இதன் உண்மைத்தன்மையை அறிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதாவது பிறவி குறைபாட்டால் முகத்தில் ஏற்கெனவே உள்ள உறுப்பை போல் டூப்ளிக்கேட்டாக இன்னொரு உறுப்பு நெற்றியில் தோன்றுவது ஆகும். நம்பத்தகுந்த ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே இது போலியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வீடியோ வைரலானவுடன் இந்த குழந்தையின் தகவல்களை அறிய மக்கள் கூகுளில் three eyed baby born என தேடி வருகிறார்கள். கூகுளில் டிரென்டிங்கிலும் உள்ளது.

English summary
Here is the video goes viral on Social Media about the three eyed baby born.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X