For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்

By Mathi
Google Oneindia Tamil News

பாரீஸ்: 80 பேரை பலி கொண்ட பிரான்ஸின் நைஸ் நகரத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.

பிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையை காண பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் நைஸ் நகரில் திரண்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஒன்றை வேகமாக ஓட்டிவந்த தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்தில் மோதவிட்டான்.

ISIS claims responsibility for Nice attack

இத்தாக்குதலில் 80 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

சிரியா, ஈராக்கில் தங்களுக்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ நடவடிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவைத் தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் கூறியுள்ளது. அத்துடன் 80 பேரை பலி வாங்கிய டிரக்கை ஓட்டி வந்ததும் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிதான் எனவும் ஐஎஸ் இயக்கம் கூறியுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்றும் ஐஎஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.

English summary
The ISIS has on its site Amaq has claimed responsibility for the attack at Nice, France that took place yesterday. The ISIS was slow to claim responsibility for the attack. However today it has said that the person who drove the truck and killed over 80 people was their soldier.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X