For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக்தாதி பலியான கையோடு ஐஎஸ் அமைப்புக்கு புதிய தலைவர் நியமனம்

Google Oneindia Tamil News

பாக்தாத்: அல் பாக்தாதி கொல்லப்பட்டதை அடுத்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு புதிய தலைவராக அப்துல்லா குவார்தாஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2012-ஆம் ஆண்டு முதல் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதியை அமெரிக்க படையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் சிரியாவில் அமெரிக்க படையினர் நடத்திய தாக்குதலில் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ISIS quickly replaces dead leader with former Saddam loyalist, say sources

வட மேற்கு சிரியாவில் இரவு நேரத்தில் மிக தைரியமாக ரெய்டு நடத்தப்பட்டு அல்பக்தாதி இருக்கும் இடத்தை அமெரிக்க படையினர் அடைந்தனர். அங்கு குகைக்கு சென்ற அவரை பிடிக்க முயன்ற போது இடுப்பில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பலியானார்.

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அல் பக்தாதியை துரத்தி சென்ற அமெரிக்க மோப்ப நாய் மட்டுமே காயம்.. டொனால்ட் டிரம்ப்

இதையடுத்து ஐஎஸ் ஐஎஸ் அமைப்பின் தலைவராக அப்துல்லா குவார்தாஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஈராக் நாட்டின் ராணுவத்தை சேர்ந்தவர். ஈராக் நாட்டின் முன்னாள் அதிபரான சதாம் ஹுசைனின் விசுவாசியாவார்.

பாக்தாதி இறந்த கையோடு தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
ISIS replaces dead leader Abu Bakr Al Baghdadi with former Iraq Army man Abdullah Qardash who is Saddam Hussain's loyalist.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X