For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிரியாவின் மிகப் பழமையான பல்மைரா நகரை வசமாக்கியது ஐ.எஸ்.!!

By Mathi
Google Oneindia Tamil News

டமாஸ்கஸ்: சிரியாவின் மிகப் பழமையான பல்மைரா நகரை ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் கைப்பற்றியுள்ளது.

ஈராக்கின் ரமாதி நகரை அண்மையில் முழுமையாக கைப்பற்றியது ஐ.எஸ். தீவிரவாத இயக்கம். அதே நேரத்தில் ஈராக்கின் ராணுவமும் ரமாதி நகரை கைப்பற்ற பகீரத முயற்சி மேற்கொண்டது.

ISIS takes full control of Syria's historic Palmyra city

இருப்பினும் ஐ.எஸ்.தீவிரவாதிகள் மூர்க்கத்தனமாக போரிட்டு ரமாதி நகரை தம் வசமாக்கினர். இந்த நிலையில் உலகின் மிகப் பழமையான பாரம்பரிய சிதிலமடைந்த கட்டடங்களைக் கொண்ட சிரியாவின் பல்மைரா நகரத்தை ஐ.எஸ். அமைப்பு கைப்பற்றியுள்ளது.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் கடுமையான போருக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிரியா ராணுவம் பின்வாங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதிகள் வசம் பல்மைரா வீழ்ந்துள்ள நிலையில் யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளவைக்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது.

English summary
ISIS militants seized full control of the ancient city of Palmyra after Syrian government forces retreated from the area Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X