For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேரவிட்டால் கடத்துவோம் - “மிஸ் ஈராக்” அழகிக்கு மிரட்டல்!

Google Oneindia Tamil News

பாக்தாத்: ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேராவிட்டால் கடத்துவோம் என்று மிஸ் ஈராக் பட்டம் வென்ற அழகிக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஈராக்கில் கடந்த 1972 ஆம் ஆண்டிற்கு பிறகு 43 ஆண்டுகளுக்கு பிறகு சமீபத்தில் தான் முதன் முறையாக அழகிப் போட்டி நடந்தது.

அதில் ஷாய்மா குயாசிம் அப்துல் ரகுமான் என்ற 20 வயது பெண் "மிஸ் ஈராக்" பட்டம் வென்றார்.

டெலிபோன் மிரட்டல்:

டெலிபோன் மிரட்டல்:

இந்த நிலையில் அவருக்கு ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் டெலிபோனில் மிரட்டல் விடுத்துள்ளனர்.

கடத்துவோம் நிச்சயம்:

கடத்துவோம் நிச்சயம்:

எங்களது ஐ.எஸ். ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தில் நீங்கள் சேர வேண்டும். மறுத்தால் உங்களை கடத்துவோம் என மிரட்டியுள்ளனர். இத்தகவலை ஒரு தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்:

மிரட்டலுக்கு பயப்படமாட்டேன்:

இதுகுறித்து அழகி ஷாய்மா கூறும்போது, ‘‘ஈராக் பெண்ணாகிய நான் எனது சமூகத்தில்தான் வாழ்கிறேன். ஆண்கள் போன்று பெண்களுக்கும் வாழ உரிமை உள்ளது என்பதை நிரூபிக்க விரும்புகிறேன். மிரட்டலுக்கு நான் பயப்படவில்லை. ஏனெனில் நான் எந்த தவறும் செய்யவில்லை'' என நம்புகிறேன்.

10 பேர் மட்டுமே பங்கேற்பு:

10 பேர் மட்டுமே பங்கேற்பு:

அழகிப் போட்டியில் பங்கேற்க 200 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் தீவிரவாதிகளின் கொலை மிரட்டலை தொடர்ந்து 10 பேர் மட்டுமே பங்கேற்றனர். மற்றவர்கள் போட்டியில் இருந்து விலகி கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Shayma Qassim Abdelrahman beat nine other women to take the title but then received a phonecall demanding she join the Caliphate or else.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X