For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காஸாவில் 'போர்க் குற்றங்களில்' இஸ்ரேல் ஈடுபட்டிருக்க வாய்ப்பு: நவநீதம் பிள்ளை

By Mathi
Google Oneindia Tamil News

ஜெனிவா: பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேல் போர்க்குற்றங்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

பாலஸ்தீனத்தின் காஸா பகுதி கடந்த 15 நாட்களாக இஸ்ரேலின் குண்டு மழைகளால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.

Israel-Gaza conflict: Israel may have committed war crimes, says UN human rights chief

இஸ்ரேலின் வெறியாட்டம்...

- சுமார் 700க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் பச்சிளங்குழந்தைகள்.

- சுமார் 5 ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 5 ஆயிரம் பேர் அகதிகளாக இடம்பெயர்ந்துவிட்டனர்.

- புற்றுநோயை உருவாக்கக் கூடிய வெண்பாஸ்பரஸ் கொத்து குண்டுகளையும் இஸ்ரேல் வீசி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

ஐநாவின் தலையீடு

- இந்த நிலையில்தான் இஸ்ரேலின் காஸா தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றி இருக்கிறது.

- மேலும் காஸாவின் மீது தற்போது நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களில் இஸ்ரேல் போர்க் குற்றங்களை இழைத்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று ஐ நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.

- காஸா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை இலக்கு வைத்தே இஸ்ரேல் தாக்கியதை நவநீதம்பிள்ளை சுட்டிக் காட்டியிருக்கிறார்.

- மேலும் பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாக்க போதிய முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டன என்று இஸ்ரேல் கூறுவது தொடர்பாக சந்தேகத்தையும் எழுப்பியுள்ளார் நவநீதம் பிள்ளை.

English summary
The two week offensive in Gaza, which has led to the deaths of hundreds of Palestinian men, women and children in the crowded coastal enclave, could have seen war crimes committed by Israel, the UN’s top human rights official has warned.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X