For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹமாஸ் இயக்கத்தின் டிஜிட்டல் போராளிகள் மீது வெற்றிகரமான தாக்குதலை நடத்தி முடித்த இஸ்ரேல்

Google Oneindia Tamil News

காசா: முழு ராணுவ சக்தியுடன் ஹமாஸ் இயக்கத்தினரின் சைபர் தாக்குதலுக்கு எதிரான ஒரு தாக்குதலை நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஹமாஸ் இயக்கத்தினரின் டிஜிட்டல் போர் நடவடிக்கைகள் செயல்பட கூடிய இடம் ஒன்றை, ராணுவ உதவியுடன் வான்வெளி தாக்குதல் நடத்தி அழித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. இஸ்ரேலிய போர் விமானங்கள் அழித்த அந்த கட்டிடம் காசா பகுதிக்குள் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Israel has successful attack on the digital fighters of the Hamas movement

மேலும் இஸ்ரேலிய இலக்குகளை குறிவைத்து ஹமாஸ் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய போது, அவர்களின் பல ஏவுகணைகளைத் வானிலேயே இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

எங்கள் வெற்றிகரமான சைபர் தற்காப்பு நடவடிக்கைகாக, ஹமாஸ் இயக்கத்திற்காக சைபர் தாக்குதல்களை மேற்கொள்பவர்கள் மீது குறிவைத்தோம் என இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இதனையடுத்து HamasCyberHQ.exe நீக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் கூறியுள்ளன.

எனினும் ஹமாஸ் மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தலாம் என்று முயற்சிக்கலாம் என கூறப்படும் தகவலை இஸ்ரேலிய ராணும் நம்பவில்லை என்றும் ஏனெனில் மீண்டும் சைபர் தாக்குதல் நடத்தும் திறமை ஹமாஸ் இயக்கத்திற்கு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

மோடிக்கு எதிரான விதி மீறல் புகார்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது! மோடிக்கு எதிரான விதி மீறல் புகார்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அறிக்கையை சமர்ப்பித்தது!

சைபர் போர் இன்னும் முக்கியத்துவத்தை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது

இஸ்ரேலின் விரிட்சுவல் நெட்வொர்க்குகள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலுக்கு பதிலடியாகவே ஹமாஸ் டிஜிட்டல் போர் மையம் தாக்கியழிக்கப்பட்டுள்ளது இஸ்ரேல் தொடுத்த வான் தாக்குதலுக்கு 5 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

English summary
Israel has announced that it has completed an offensive against the Hamas movement's cyber attack with full military power.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X