For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரத்திற்கு நாங்கள் காரணமல்ல.. இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு

Google Oneindia Tamil News

ஜெருசேலம்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

Recommended Video

    Lebanon தலைநகர் Beirut-ல் திடீர் குண்டுவெடிப்பு

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இந்திய நேரப்படி ஆகஸ்ட் 4ம்தேதி இரவு 9.30 மணி அளவில் பயங்கரமான குண்டுவெடிப்பு ஏற்பட்டது. முதலில் இது ஏதேனும் வெளிநாட்டு சதியா என்ற கோணத்தில் சந்தேகிக்கப்பட்டது. லெபனானின் அண்டை நாடான இஸ்ரேல் மீது சந்தேகம் எழுந்தத. இந்நிலையில லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என இஸ்ரேல் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது.

    Israel not involved in Beirut explosion, Israeli official says

    பெய்ரூட் துறைமுக பகுதியில் ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கும் தங்களுக்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த அதிகாரி பெயரை வெளியிடவில்லை.

    லெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் குண்டு வெடிப்பு.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு!லெபனானில் அணு ஆயுதங்கள் வெடித்து சிதறியதைப் போல் குண்டு வெடிப்பு.. பக்கத்து நாட்டிலும் நில அதிர்வு!

    இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் காபி அஷ்கெனாசி இஸ்ரேலிய என் 12 தொலைக்காட்சி செய்தியிடம், லெபனான் குண்டுவெடிப்பு என்பது பெரும்பாலும் தீ விபத்தால் ஏற்பட்ட வெடி விபத்தாக இருக்கும் என்று கூறினார்.

    லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி? அச்சத்தில் பெய்ரூட்லெபனான் குண்டு வெடிப்பு பயங்கரம்.. ரத்த காயத்துடன் சிதறி ஓடிய மக்கள்.. பலர் பலி? அச்சத்தில் பெய்ரூட்

    இதனிடையே பெய்ரூட்டில் நடந்தது வெடிவிபத்து என்று லெபனான் உறுதி செய்துள்ளது. பழைய நைட்ரேட் வெடிபொருட்கள் குடோனில் ஏற்பட்ட பயங்கரமான விபத்து என்று இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்தால் ஏற்ட்டிருப்பது மிகப்பெரிய சேதம் என்றும் தெரிவித்தனர்.

    லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோலெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பூமியை பிளக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பு.. ஷாக் வீடியோ

    English summary
    Israel has nothing to do with a huge explosion at the Beirut port area, an Israeli official has said. Israel's Foreign Minister Gabi Ashkenazi told Israeli N12 television news that the explosion was most likely an accident caused by a fire.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X