For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காக்கும் "அயர்ன்-டோம்.." காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. தொடர் தாக்குதல்.. பரிதவிக்கும் பாலஸ்தீனம்!

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: காஸாவில் ஹமாஸ் குழுக்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதோடு ஹமாஸ் நடத்தும் பதில் தாக்குதல்களை "அயர்ன் டோம்" என்ற ஏவுகணை இடைமறிப்பு ஆயுதம் மூலம் இஸ்ரேல் தடுத்து வருகின்றது.

Recommended Video

    Gaza-வை சுற்றி வளைத்த Israel.. தொடர் தாக்குதலால் பரிதவிக்கும் பாலஸ்தீனம்!

    பாலத்தீனம் மீண்டும் பற்றியெறிந்து கொண்டு இருக்கிறது.. ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை நடத்தும் அல் அக்சா மசுதிக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் தொடங்கிய பிரச்சனை தற்போது முழு போராக உருவெடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

    மத்திய அரசு ஏதும் செய்யாது.. தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் மக்களே.. ராகுல் வேண்டுகோள்! மத்திய அரசு ஏதும் செய்யாது.. தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யுங்கள் மக்களே.. ராகுல் வேண்டுகோள்!

    இஸ்ரேலின் பிரதமர் பதவியில் தொடர்வது பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சிக்கலான நேரத்தில், சரியாக மீண்டும் காஸா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த காஸா பிரச்சனை மூலம் கிட்டத்தட்ட நெதன்யாகுவின் பிரதமர் பதவி மீண்டும் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.

    தாக்குதல்

    தாக்குதல்

    அல் அக்சா மசுத்திக்குள் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இஸ்ரேலுக்குள் காஸாவில் உள்ள ஹமாஸ் போர்ப்படை தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காஸாவில் வான்வெளி தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

    எத்தனை

    எத்தனை

    கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த மோதல் 1 வாரமாக நடந்து வருகிறது. இதில் ஹமாஸ் படை தினமும் கிட்டத்தட்ட 100க்கும் அதிகமான ராக்கெட்டுகளை இஸ்ரேல் மீது ஏவி உள்ளது. அதே சமயம் இஸ்ரேல் ஹமாஸ் படைகள் இருக்கும் இடங்களை குறி வைத்து காஸாவில் தினசரி 100-200 விமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதுவரை நடந்த இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை விட இது வித்தியாசமானதாக பார்க்கப்படுகிறது.

    ஏன்

    ஏன்

    இதற்கு முன் நடந்த இஸ்ரேல் ஹமாஸ் மோதல்கள் எல்லாம் அதிகபட்சம் 2-3 நாட்கள் நீடிக்கும். அதிலும் கூட பெரிய அளவில் ராக்கெட் தாக்குதல் இருக்காது. ஆனால் இப்போது நடப்பதோ மிகப்பெரிய போருக்கு இணையான மோதலாக பார்க்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் எப்போது போர் வந்தாலும் இஸ்ரேல்தான் வெல்லும் என்பது வரலாறு. 1947, 1967 இரண்டு போரிலும் இஸ்ரேல் வென்றதன் மூலம்தான் அந்த நாடு இவ்வளவு பெரிதாக விரிவடைந்தது.

    சோகம்

    சோகம்

    இதனால் இந்த முறை நடக்கும் மோதலும், இஸ்ரேலுக்கு கொஞ்சம் ஆதரவாக செல்ல தொடங்கி உள்ளது. அதிலும் இஸ்ரேலிடம் இருக்கும் நவீன் ஆயுதங்கள் ஹமாஸ் இயக்கத்திற்கு நெருக்கடி கொடுத்துள்ளது. முக்கியமான ஹமாஸின் ராக்கெட் தாக்குதல்களை சமாளிக்க இஸ்ரேல் அயர்ன் டோம் எனப்படும் ஏவுகணைகளை இடமறித்து தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது.

     சிறப்பு

    சிறப்பு

    10க்கும் மேற்பட்ட இதுபோன்ற அயர்ன் டோம்களை இஸ்ரேல் காஸா அருகிலும், பாலஸ்தீனத்திலும் வைத்து, ஹமாஸ் ஏவும் ராக்கெட்டுகளை எல்லாம் பூமிக்கு வரும் முன்பே வானிலே மறித்து தாக்கி விடுகிறது. கடந்த ஜனவரியில் இருந்து சுமார் 2000 ராக்கெட்டுகளை இந்த அயர்ன் டோம் இடைமறித்து தாக்கி உள்ளது. இதனால் இஸ்ரேல் பக்கம் இதுவரை பெரிய அளவில் சேதாரம் ஏற்படவில்லை. மொத்தமாக 7 நாள் மோதலில் இஸ்ரேல் பக்கம் 7 பேரும் காசாவில் 84 பேரும் பலியாகி உள்ளனர். உண்மையான காஸா பலி எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கலாம் என்கிறார்கள்.

    குறி வைத்து

    குறி வைத்து

    அதிலும் இந்த முறை காஸாவில் ஹமாஸ் இருக்கும் இடங்கள் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் 14 மாடி கட்டிடம் உட்பட பல குடியிருப்பு பகுதிகளில் இஸ்ரேல் தாக்கி வருகிறது. முன்பே எச்சரிக்கை விடுத்து தாக்குவதால் கொஞ்சம் இறப்பு எண்ணிக்கை குறைந்தாலும் இஸ்ரேல் மிக மோசமான பாதையை தற்போது கையில் எடுத்துள்ளது. மொத்தமாக காஸாவை காலி செய்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது.

    எப்படி

    எப்படி

    1947 போரில் இஸ்ரேல் பாதி பாலத்தீனத்தை பிடித்தது. அதன்பின் 1967 போரில் வெஸ்ட் பேங்கை இஸ்ரேல் கட்டுக்குள் கொண்டு வந்தது. தற்போது மீண்டும் 2021ல் நடக்கும் இந்த மோதலில் காஸாவை அடைந்துவிடலாம், ஹமாஸை அழித்துவிடலாம் என்று இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. தற்போது மோதல் நடக்கும் விதமும்.. தினசரி மோதல் செல்லும் திசையும் இஸ்ரேலுக்கு சாதகமாக இருப்பதால் பாலஸ்தீன மக்கள் கடும் பதற்றத்திற்கு உள்ளாகி உள்ளனர்!

    English summary
    Israel- Palestine- Gaza conflict: How Iron Dome and series of air strikes help Jews in the mini-war?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X