For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈரானுக்கு எதிராக வரிந்து கட்டும் இஸ்ரேல்: எங்கப்பக்கம் வந்தா அவ்வளவுதான்.. வார்னிங் கொடுத்த பிரதமர்!

Google Oneindia Tamil News

ஜெருசலேம்: இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரானுக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் நாட்டு ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதனால் ஈரான் அரசும் மக்களும் அமெரிக்கா மீது கடுமையான கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

ஈரான் - அமெரிக்கா சண்டையில் உள்ளே வந்த பெரிய தலைக்கட்டு.. டிவிஸ்ட்.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை!ஈரான் - அமெரிக்கா சண்டையில் உள்ளே வந்த பெரிய தலைக்கட்டு.. டிவிஸ்ட்.. விஸ்வரூபம் எடுக்கும் பிரச்சனை!

போர் பதற்றம்

போர் பதற்றம்

இதில் அமெரிக்க படையை சேர்ந்த 80 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

இஸ்ரேல் எச்சரிக்கை

இஸ்ரேல் எச்சரிக்கை

இந்நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேஸ் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

தாக்குதலை தொடர்ந்து

தாக்குதலை தொடர்ந்து

இஸ்ரேல் தலைநகர் ஜெருசலேமில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரானுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதலை நடத்தியதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறார்.

ட்ரோன் தாக்குதல்

ட்ரோன் தாக்குதல்

எங்கள் மீது தாக்குதல் நடத்தும் எவராயிருந்தாலும் பதில் அடியை பெறுவார்கள் என்று கூறியுள்ளார். மேலும், கடந்த வாரம் அமெரிக்க ட்ரோன் தாக்குதல் குறித்தும் நெதன்யாகு பேசினார்.

இஸ்ரேல் ஆதரவு

இஸ்ரேல் ஆதரவு

ஈரான் படைத்தளபதி காசிம் சுலைமானி ஒரு "பயங்கரவாதத் தலைவர்" என்று விவரித்தார். சுலைமானி கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் நட்பு நாடுகளே அதிருப்தி தெரிவித்த நிலையில் இஸ்ரேல் மட்டும் அமெரிக்காவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் ஆதரவு

பிரிட்டன் ஆதரவு

ஏற்கனவே ஈரான், அமெரிக்க படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது தவறு என கூறியுள்ளது பிரிட்டன். இந்நிலையில் தனது பரம எதிரியான ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது ஈரான்.

English summary
Isreal Prime Minister Benjamin Netanyahu warns Iran. IfAnyone who attacks us will receive a resounding blow,he said after the Jerusalem conference.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X