For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவர்தான் முக்கிய புள்ளி.. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பயங்கரம்.. காஸாவின் போராளி குழு தலைவர் கொலை!

காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலத்தீன போராளி குழுவான பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    இஸ்ரேல் நடத்திய தாக்குதல் .. காஸா போராளி குழு தலைவர் கொலை!

    ஜெருசலேம்: காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலத்தீன போராளி குழுவான பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.

    இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்தின் காஸா இடையிலான போர் மீண்டும் உச்சம் அடைந்து இருக்கிறது. இரண்டு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று மதியத்தில் இருந்து இரண்டு தரப்பினரும் மாற்றி மாற்றி தங்களுக்குள் தாக்கிக் கொள்கிறார்கள்.

    இஸ்ரேலுக்கு அருகேவும், பாலஸ்தீனத்திற்கு இடப்புறமும் இருக்கும் காசா மீண்டும் போர் பூமியாக மாறியுள்ளது. காஸாவில் உள்ள போராளி குழுக்களும் சரமாரியாக இந்த தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தி வருகிறது.

    யார் தாக்கியது

    யார் தாக்கியது

    இஸ்ரேலுக்கு எதிராக காஸாவில் செயல்படும் ஹமாஸ் போராளி குழுதான் பொதுவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும். ஆனால் அந்த முறை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது பாலத்தீன போராளி குழுவான பிஐஏ எனப்படும் பாலஸ்தீன இஸ்லாமிக் ஜிஹாத் என்ற அமைப்பு ஆகும். ஹமாஸ் குழுவின் இணை இயக்கமாக இது பார்க்கப்படுகிறது.

    முதல் தாக்குதல்

    முதல் தாக்குதல்

    இந்த தாக்குதலை இரண்டு தரப்பில் முதலில் யார் நடத்தியது என்ற விவரம் வெளியாகவில்லை. இஸ்ரேல் மொத்தம் 200 ராக்கெட்டுகளை காஸா மீதி வீசி மிக கொடூரமான தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதலில் பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் மீது நடக்கும் தாக்குதலுக்கு பொதுவாக இவர்தான் மாஸ்டர் மைண்ட் என்கிறார்கள்.

    அதிரடி

    அதிரடி

    இஸ்ரேல் நாட்டின் இஸ்ரேல் டிபன்ஸ் போர்ஸ் இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் தாக்குதல் முறையில், காஸா எல்லைக்குள் சென்று இஸ்ரேல் படை இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. காஸாவில் இருந்த மிக முக்கியமான போராளிகள் பயன்படுத்தும் குகை இதனால் அழைக்கப்பட்டுள்ளது.

    தீவிரவாத தாக்குதல்

    தீவிரவாத தாக்குதல்

    அதேபோல் காஸாவில் இந்த போராளி குழுக்கள் வைத்திருந்த முக்கியமான தலைமையிடம் அழிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் மீது அவர்கள் குகை வழியாக வந்து தாக்குதல் நடத்த திட்டமிட்டதால், காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில்தான் பிஐஏ குழுவின் தலைவர் பாஹா அபு அல் அதா கொலை செய்யப்பட்டார்.

    தீவிர தேடல்

    தீவிர தேடல்

    அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நட்பு நாடுகள் எல்லாம் பாஹா அபு அல் அதாவை பல வருடங்களாக தேடி வந்தது. காஸா போரில் மிக முக்கியமான நபராக பாஹா அபு அல் அதா பார்க்கப்பட்டார். தற்போது அவருடன் அவரின் தளபதி, மனைவி, குழந்தைகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெரிய பதற்றம்

    பெரிய பதற்றம்

    இதனால் தற்போது இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. முழு வீச்சில் போர் நடப்பதற்கான ஏற்பாடுகளும், சூழ்நிலைகளும் அங்கே உருவாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Israeli attacks Palestinians in Gaza: PIJ chief Bahaa Abu al-Ata killed in the air strike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X