For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிக சக்தி வாய்ந்தது இஸ்ரேல் ராணுவம் தான்: ஆய்வில் தகவல்

Google Oneindia Tamil News

Israeli military most powerful in Middle East, says study
நியூயார்க்: மத்திய கிழக்கு நாடுகளிலேயே அதிக சக்தி வாய்ந்த ராணுவம் இஸ்ரேல் ராணுவம்தான் என்று நியூயார்க்கைச் சேர்ந்த ஒரு வர்த்தக மற்றும் தொழில்நுட்ப செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கில், இஸ்ரேல் ராணுவம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உள்ளதாகவும் அது கூறியுள்ளது. அதேபோல், மத்திய கிழக்கில் உள்ள 15 ராணுவத்திலும் இஸ்ரேல்தான் மிகவும் வலிமையானது என்றும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மத்திய கிழக்கு நாடுகளின் எதார்த்த நிலை, ராணுவ பலம், உள்நாட்டுக் குழப்பங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்த ஆய்வு முக்கியமானதாக கருதப்படுகிறது.

குழப்பங்கள்... உள்நாட்டுப் போர்

சிரியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ளது. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் பெருகி வருகிறது. பல்வேறு அரேபிய நாடுகளில் குழப்பங்கள் நிலவி வருகின்றன. ஈராக்கின் நிலையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஆய்வறிக்கை...

இந்த, நிலையில்தான் இஸ்ரேலின் ராணுவ வலிமை குறித்த ஆய்வறிக்கையை இந்த இணையதள ஆய்வு வெளியிட்டுள்ளது.

அதிநவீன ராணுவம்...

இதுகுறித்து அந்த ஆய்வின் கட்டுரையாளர்கள் குறிப்பிடுகையில், இஸ்ரேல் அதி நவீன ராணுவத்துடன் கூடியதாக திகழ்கிறது. மேம்படுத்தப்பட்ட போர் விமானங்கள், அதி உயர் தொழில்நுட்ப ட்ரோன்கள், அணு ஆயதங்கள் என அதனிடம் சகலமும் உள்ளன.

வலிமையானது...

எந்த நேரத்திலும் போரில் ஈடுபடும் வகையிலான வலிமையான ராணுவமாக இஸ்ரேல் ராணுவம் உள்ளது. 2006ம் ஆண்டு முதல் அது நான்கு முக்கிய போர்களில் ஈடுபட்டுள்ளது. மேலும் நல்ல போர் அனுபவம் கொண்ட நாடாகவும் அது திகழ்கிறது.

வெளிநாட்டு ஆதரவு...

இஸ்ரேலின் சுய ராணுவ பலம் மட்டுமே ஆய்வில் கணக்கெடுக்கப்பட்டது. வெளிநாட்டு ஆதரவு கருத்தில் கொள்ளப்படவில்லை. அதையும் குறிப்பாக அமெரிக்காவின் ராணுவ ஆதரவையும் சேர்த்தால் இஸ்ரேல் ராணுவம் மேலும் பலமானதாக உருவெடுக்கும்.

விமானப் படை...

இஸ்ரேல் விமானப்படை மிகவும் திறமையானது, சக்தி வாய்ந்ததாகும். துல்லியமாக இலக்குகளைத் தாக்கக் கூடிய திறமை படைத்தவர்கள் இஸ்ரேல் போர் விமானிகள்.

2ம் இடத்தில்...

மத்திய கிழக்கில் 2வது வலிமையான ராணுவமாக துருக்கி உள்ளது. 3வது இடத்தை சவூதி அரேபியா பிடிக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஈரான், எகிப்து, சிரியா, ஜோர்டான், ஓமன், குவைத், கத்தார், பஹ்ரைன், ஈராக், லெபனான், ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன என்று அந்த ஆய்வு கூறுகிறது.

English summary
Israel's military is the most powerful in the Middle East, media reported quoting a study commissioned by Business Insider.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X