இஸ்ரேல் நெதன்யாகுவை சல்மான் சந்திக்கவில்லை.. சவுதி அரேபியா திடீர் மறுப்பு..2 மணி நேரம் என்ன நடந்தது?
ரியாத்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சவுதியின் முடி இளவரசர் சல்மான் சந்திக்கவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான உறவு கவனம் பெற்றுள்ளது. இஸ்ரேல் உடன் சில இஸ்லாமிய நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கமா காட்ட துவங்கி உள்ளது.
பாலஸ்தீன பகையை மறந்து இஸ்ரேல் உடன் ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், சூடான் போன்ற நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்காவின் தூதின் பெயரில் இந்த ஒப்பந்தங்கள் நடந்தது.

என்ன
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை சவுதியின் முடி இளவரசர் முகமது பின் சல்மான் சந்தித்தார் என்று செய்திகள் வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் இருவருக்கும் இடையே சந்திப்பு நடந்ததாக செய்திகள் வெளியானது. இதற்காக நெதன்யாகு சவுதி சென்றார் என்றும் கூறப்பட்டது.

சவுதி சென்றார்
சவுதியில் இருக்கும் நியோன் பகுதியில் இந்த சந்திப்பு நடந்தது. இவர்கள் இரண்டு மணி நேரம் ஆலோசனை செய்தனர் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் நெதன்யாகுவை சவுதியின் முடி இளவரசர் சல்மான் சந்திக்கவில்லை என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

மறுப்பு
இது தொடர்பாக வெளியாகும் செய்திகள் உண்மை இல்லை என்று சவுதி மறுத்துள்ளது. மாறாக அமெரிக்காவை சேர்ந்த வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ உள்ளிட்ட அதிகாரிகள் மட்டுமே சவுதி வந்தனர். வேறு நாட்டு தலைவர்கள் யாரும் வரவில்லை என்று சவுதி தெரிவித்துள்ளது.

எங்கே
இதனால் நெதன்யாகுவிற்கு சொந்தமான பிசினஸ் விமானம் சவுதியில் இரண்டு மணி நேரம் இறங்கியது ஏன்? அங்கே இரண்டு மணி நேரம் என்ன நடந்தது, அந்த விமானத்தில் நெதன்யாகு இருந்தாரா என்று கேள்விகள் எழுந்துள்ளது. இது தொடர்பான விமான டிராபிக் டேட்டா நேற்று இணையத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலுக்கு எதிராக சவுதி இன்னும் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை.

பாலஸ்தீனம்
பாலஸ்தீனம் குறித்து பேசாமல், பாலஸ்தீன பிரச்சனையை சரி செய்யாமல் இஸ்ரேல் உடன் ஒப்பந்தம் செய்ய முடியாது என்று சவுதி ஏற்கனவே தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது இரண்டு நாட்டு தலைவர்கள் சந்திப்பை சவுதி மறுத்து உள்ளது.