For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2-வது முறை தடுப்பூசி போட்ட இஸ்ரேல் பிரதமர்... மார்ச்க்குள் அனைவருக்கும் தடுப்பூசி என உறுதி!

Google Oneindia Tamil News

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு நேற்று 2-வது முறையாக பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார்.

மார்ச் மாதத்திற்குள் அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 Israeli PM receives 2nd dose of Covid-19 vaccine

உலக நாடுகளை ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து அச்சறுத்தி வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு. இதனால் பல நாடுகள் கொரோனா தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிட்டன.

இஸ்ரேல் நாட்டில் பைசர் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த தடுப்பூசி மக்களுக்கு போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு ஏற்கனவே தான் முதல் தடுப்பூசியை போட்டு கொண்டு மக்களுக்கு அதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

இந்த நிலையில் பென்ஜமின் நெதன்யாகு நேற்று 2-வதாகவும் பைசர் தடுப்பூசியை போட்டுக் கொண்டார். பிரதமருக்கு தடுப்பூசி போடும் பணி அந்த நாட்டு ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கோவாக்சின் தடுப்பூசி மீது..நம்பிக்கை இல்லைங்க..அது வேண்டாம்..சத்தீஸ்கர் அமைச்சர் எதிர்ப்பு! கோவாக்சின் தடுப்பூசி மீது..நம்பிக்கை இல்லைங்க..அது வேண்டாம்..சத்தீஸ்கர் அமைச்சர் எதிர்ப்பு!

தடுப்பூசியை போட்டு பென்ஜமின் நெதன்யாகு நிருபர்களிடம் கூறுகையில், இஸ்ரேலுக்கு கணிசமான அளவு தடுப்பூசிகளை வழங்குவதற்காக பைசருடன் நாங்கள் ஒப்பந்தம் செய்துள்ளோம். வருகிற மார்ச் மாதம் நடுப்பகுதிக்குள் அனைத்து இஸ்ரேலிய மக்களுக்கும் தடுப்பூசி போடப்படும். இதன் மூலம் எங்கள் முழு பொருளாதாரத்தையும் திறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று கூறினார்.

English summary
Israeli Prime Minister Benjamin Netanyahu vaccinated Pfizer for the second time yesterday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X