For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

யூத- முஸ்லீம் கலப்பு திருமணம்: இஸ்ரேல் மக்கள் போராட்டம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

காஸா: இஸ்ரேலில் போர்பதற்றமான சூழ்நிலையில் யூதப்பெண் ஒருவர் முஸ்லீம் இளைஞரை மதம் மாறி திருமணம் செய்து கொண்ட சம்பவத்தில் ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பை ஏற்பட்டது.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகளின் எல்லையோரம் உள்ள காஸாவில் வாழும் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேல் நாட்டினருக்குமிடையில் பகை நிலவி வருகிறது. இது தவிர, இஸ்லாமிய நெறிமுறைகளை பின்பற்றி வாழும் பாலஸ்தீனிய முஸ்லிம்களையும் இஸ்ரேலியர்கள் தங்களது ஜென்ம எதிரிகளாக கருதி வருகின்றனர்.

சமீபத்தில், இஸ்ரேலிய மாணவர்கள் 3 பேரை கடத்திக் கொன்றது தொடர்பாக காஸா பகுதி மீது சுமார் 40 நாட்கள் இஸ்ரேலின் முப்படைகளும் நடத்திய தாக்குதலில் சுமார் 2 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் தரப்பில் நூற்றுக்கும் குறைவான உயிரிழப்பு ஏற்பட்டது.

எகிப்து அதிபரின் தலையீட்டின் பேரில் தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்டு, இரு தரப்பினருக்கும் இடையில் கெய்ரோவில் தற்போது இரண்டாவது சுற்று சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை சேர்ந்த மரல் மல்க்கா(23) என்ற யூதப் பெண்ணுக்கும், மஹ்மவ்ட் மன்சவுர்(26) என்ற இஸ்லாமிய இளைஞருக்கும் நேற்று ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெற்றது.

யூத மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறிய மரல் மல்க்கா முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்து கொள்ளும் செய்தி காட்டுத்தீ போல டெல் அவிவ் நகருக்குள் பரவியது. இதையறிந்து, மண்டபத்தின் அருகே திரண்டு வந்த சுமார் 200 யூத ஆண்களும், பெண்களும் உள்ளே நுழைந்து இந்த திருமணத்தை தடுக்க முயன்றனர்.

இந்த செய்தி அறிந்து அங்கு வந்த போலீசாரும், ராணுவத்தினரும் அவர்களை தடுத்து நிறுத்தி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினர்.

இஸ்ரேல் நாட்டின் சுகாதார அமைச்சர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற இந்த திருமணம் திட்டமிட்டபடி நடந்து முடிந்ததும், வெளியே திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மணமக்களை சபித்தனர். அவர்களுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இஸ்ரேல் நாட்டின் உள்ள மொத்த மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதத்தினர் அரபு நாடுகளை சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Israeli police on Sunday blocked more than 200 far-right Israeli protesters from rushing guests at a wedding of a Jewish woman and Muslim man as they shouted "death to the Arabs" in a sign of tensions stoked by the Gaza war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X