For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னை குளோன் பண்ணல, நான் இன்னும் சாகல.. அட ஒரு நாட்டோட அதிபரை இப்படி சொல்ல வச்சிட்டீங்களே!

நைஜீரியா அதிபர் முகமது புஹாரி, தான் இன்னும் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

அபுஜா: நைஜீரியா அதிபர் முகமது புஹாரி, தான் இன்னும் சாகவில்லை, உயிரோடுதான் இருக்கிறேன் என்று பேட்டியளித்துள்ளார்.

உலகம் முழுக்க சில முக்கிய தலைவர்களுக்கு பதிலாக அவர்களை போலவே இருக்கும் சில நபர்கள் மாற்று ஆளாக பயன்படுத்தப்படுவது வழக்கம். பாடி டபுள் என்று அழைக்கப்படும் இவர்கள், தீவிரவாத அச்சுறுத்தல்களில் இருந்து பெரிய தலைவர்களை காக்க பயன்படுத்தப்படுவார்கள்.

இந்த நிலையில் நைஜீரியா அதிபர் முகமது புஹாரி இப்போது உயிரோடு இல்லை, அவருக்கு பதிலாக அவரைப் போலவே இருக்கும் பாடி டபுள்தான் ஆட்சி செய்து வருகிறார் என்று பரபரப்பு செய்தி கடந்த சில நாட்களாக பரவி வருகிறது.

சிகிச்சை பெற்றுவந்தார்

சிகிச்சை பெற்றுவந்தார்

நைஜீரியா அதிபர் முகமது புஹாரி கடந்த மே மாதம் பிரிட்டன் சென்றார். 75 வயதாகும் இவர், அங்கு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு என்ன பிரச்சனை, என்ன நோய் என்று கூறப்படவில்லை. அங்குதான் இவர் தற்போதும் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீயாக பரவியது

தீயாக பரவியது

இந்த நிலையில் இவர் இறந்துவிட்டார் என்று கடந்த மூன்று மாதமாக செய்திகள் வந்தது. சிகிச்சை காரணமாக அங்கு சென்றவர் இறந்துவிட்டார். பாதுகாப்பு கருதி இதை சொல்லவில்லை என்று மக்கள் நைஜீரியாவில் பேசி வருகிறார்கள். இதற்காக வீடியோவும் கூட வெளியானது குறிப்பிடத்தக்கது.

யார் அவர்

யார் அவர்

அதுமட்டுமில்லாமல் சூடானை சேர்ந்த மதகுருவான ஜூப்ரில் என்பவர்தான் தற்போது புஹாரி இடத்தில் இருப்பது. இருவரும் பார்க்க ஒன்று போல இருப்பார்கள். இதனால் ஜூப்ரீல் பாடி டபுளாக பயன்படுத்தப்படுகிறார் என்று அந்நாட்டு மக்கள் புகைப்படங்களுடன் ஆதாரங்களை வெளியிட்டுள்ளனர்.

மறுத்தார்

மறுத்தார்

இந்த நிலையில் சிகிச்சைக்கு இடையில் இந்த வதந்திக்கு புஹாரி முற்றுப்புள்ளி வைத்து இருக்கிறார். இதுகுறித்து அந்நாட்டு செய்தி சேனல்களுக்கு அவர் பேட்டியளித்துள்ளார். அதில் ''கடவுளே நான் இன்னும் சாகவில்லை. என்னை யாரும் கொல்லவும் இல்லை, எனக்கு பாடி டபுளும் இல்லை. நான் நலமுடன் இருக்கிறேன். விரைவில் 76வது பிறந்தநாளை கொண்டாடுவேன்'' என்று கூறி இருக்கிறார். அவரது இந்த பேட்டி வைரலாகி உள்ளது.

English summary
'It's the real me, not body double' says Nigeria’s President Muhammadu Buhari.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X