For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆஸி. கிரிக்கெட் நிலையை பாருங்க: "பெரிய தவறு செய்துவிட்டேன்.." பிரஸ் மீட்டில் கண்ணீர் வடித்த ஸ்மித்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    பிரஸ் மீட்டில் கண்ணீர் வடித்த ஸ்மித்!-வீடியோ

    சிட்னி: பெரிய தவறு செய்துவிட்டேன், மன்னித்துவிடுங்கள் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்தார்.

    நான் யாரையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் என்ற முறையில் முழு பொறுப்பும் என்னுடையதுதான். பந்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் முழு பொறுப்பையும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.

    எனது கேப்டன்ஷிப்தான் தோல்வி கண்டுள்ளது. எனது தவறுகளை திருத்திக்கொள்ள என்னால் முடியும் அனைத்தையும் செய்ய தயாராக உள்ளேன். உலகின் தலை சிறந்த விளையாட்டு கிரிக்கெட். கிரிக்கெட்தான் எனது வாழ்க்கை. அது திரும்ப கிடைக்கும் என நம்புகிறேன்.

    மன்னிப்பீர்கள்

    மன்னிப்பீர்கள்

    வாழ்க்கை முழுக்க இந்த தவறுக்காக நான் வருத்தப்பட வேண்டியிருக்கும். எனக்கு கிரிக்கெட் மிகவும் பிடிக்கும். இளம் வீரர்களை என்டைர்டெய்ன்மென்ட் செய்துகொண்டுள்ளேன். நான் மீண்டு வரும்போது, என்னை அனைவரும் மன்னித்திருப்பீர்கள் என நம்புகிறேன். இவ்வாறு ஸ்மித் கூறினார்.

    கண்ணீர் விட்ட ஸ்மித்

    கண்ணீர் விட்ட ஸ்மித்

    ஸ்மித் பேட்டியளித்தபோது திடீரென கண்ணீர் விட்டார். இதை பார்த்த நிருபர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தி, வெற்றிபெற முயன்றது அம்பலமானதால், ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னருக்கு ஓராண்டு கிரிக்கெட் விளையாட ஆஸி. கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மன்னிக்கலாமே

    இதுகுறித்து நெட்டிசன்கள், வெவ்வேறு வகை கருத்துக்களை கூறி வருகிறார்கள். சிலர் வரவேற்றுள்ளனர். சிலர் ஸ்மித்துக்கு இது தேவைதான் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரியமனிதத்தனம்தான் என்கிறார் இந்த நெட்டிசன்.

    கிண்டல் மீம்

    தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் வரும் கொள்ளையன் கதாப்பாத்திரம், கடைசிவரை போலீசிடம் வாய் திறக்காமல் ஒரே வார்த்தையை திரும்ப திரும்ப கூறுவதை ஒப்பிடுகிறது இந்த மீம்.

    English summary
    I take full responsibility ... There was a failure of leadership, of my leadership. I'll do everything I can to make up for my mistake and the damage it's caused, says Steve Smith.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X