For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

”உக்காந்து சாப்ட்டாக் கூட பில்கேட்ஸ் சொத்துக்களை தீர்க்க 218 வருஷம் ஆகுமாம்” – ஆய்வில் தகவல்!

Google Oneindia Tamil News

லண்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனரான பில் கேட்ஸின் சொத்துக்களை செலவு செய்து தீர்க்கவே 218 வருடங்கள் ஆகும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்பாம் நிறுவனம் மேற்கொண்ட கேட்டாலே தலை சுற்ற வைக்கும் இந்த "காஸ்ட்லி" ஆய்வில் பல்வேறு செல்வந்தர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.

அதன்படி, மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பை தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என தெரியவந்துள்ளது.

220 ஆண்டுகள்:

220 ஆண்டுகள்:

இதே போல் உலக செல்வந்தர்களுள் ஒருவரான கார்லோஸ் ஸ்லிம், ஒரு நாளுக்கு ஒரு மில்லியன் டாலர் என்ற கணக்கில் செலவிட்டால் அவரது சொத்து மதிப்பை 220 ஆண்டுகளில் செலவிடமுடியும்.

வாரென் பப்பெட்க்கு 169 ஆண்டுகள்:

வாரென் பப்பெட்க்கு 169 ஆண்டுகள்:

வாரென் பப்பெட் இதே முறையில் ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் செலவிட்டால் 169 ஆண்டுகளில் அவரது சொத்துக்களைச் செலவிட முடியும்.

இருமடங்காக அதிகரிப்பு:

இருமடங்காக அதிகரிப்பு:

ஆக்ஸ்பாம் நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், பொருளாதார மந்தநிலையின் போது உலக பில்லியனர்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறப்பணிகளில் ஈடுபாடு:

அறப்பணிகளில் ஈடுபாடு:

உலக செல்வந்தர்களாக திகழும் பில் கேட்ஸ், வாரென் பப்பெட் ஆகியோர் சமூக நல மற்றும் அறப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

3 பில்லியன் டாலர்கள் நன்கொடை:

3 பில்லியன் டாலர்கள் நன்கொடை:

பில்கேட்ஸ் நடத்தி வரும் பில் மற்றும் மெலிண்டா அறக்கட்டளைக்கு 2014 ஆம் ஆண்டில் மட்டும் வாரென் பப்பெட் 3 பில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
At a spending rate of $1 million a day, most people would blow through their entire life savings in less than a week.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X