• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

யாரு பொண்டாட்டி பத்தினியோ.. "உற்று பாரு, தெரியுதா.." 13 லட்சம் எடு.. உலகத்தையே பேச வைத்த ஒரு ஏலம்!

Google Oneindia Tamil News

ரோம்: அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை, பார்ப்பவர்கள் கண்களில் இருக்கிறது.. என்பார்கள். ஆனால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ரூ.13 லட்சம் கொடுத்து அதையும் ரசிக்கலாம்!

உண்மைதான். இருக்கு.. ஆனா இல்லை.. என்று எஸ்ஜே சூர்யா ஒரு படத்தில் சொல்வாரே, அதே மாதிரி பேசி, ஒரு சிற்பி, ரூ.13 லட்ச ரூபாய்க்கு "வெற்றிடத்தை" விற்பனை செய்துள்ளார்.

இந்த வெற்றிட சிற்பியின் வெற்றிக் கதை பற்றிதான் இப்போது உலகமே மூக்கு மேலே விரலை வைத்து பேசிக் கொண்டு இருக்கிறது.

ஜெகஜால சிற்பி

ஜெகஜால சிற்பி

இந்த ஜெகஜால சிற்பியின் பெயர், சால்வடோர் கராவ். ஒவ்வொரு சிற்பியும், வியர்வை சிந்தி சிற்பங்களை வடித்து விற்பனை செய்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்தால், சால்வடோர் கராவ் வேற லெவலில் பிளான் போட்டு, பல லட்சங்களை ஈட்டி வருகிறார். இப்படித்தான், Io Sono என்ற பெயரில் அவர் போன மாதம் நம்மூர் மதிப்புக்கு ரூ.13 லட்சத்திற்கு ஒரு "சிற்பத்தை" விற்பனை செய்துள்ளார்.

உற்று பார்த்தால் ஒன்னுமில்லை

உற்று பார்த்தால் ஒன்னுமில்லை

இந்த சிற்பத்தின் விஷேசம் என்னவென்றால், ஒன்றுமே இல்லாத வெற்றிடத்தைதான் சிற்பம் என்று கூறி விற்பனை செய்துள்ளதுதான். இத்தாலிய ஏல நிறுவனம் ஆர்ட்-ரைட் மே மாதத்தில் "அளவிடமுடியாத" சிலை என்ற பெயரில் ஏலத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. ஆரம்பத்தில் மதிப்பிடப்பட்ட மதிப்பு, 7,000 டாலர் முதல், 11,000 டாலர் வரை என்று கூறப்படுகிறது. ஆனால் இதையும் ஒருவர் 18,000 அமெரிக்க டாலர் அளவுக்கு பணம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார் என்பதுதான் மேட்டரே.

கொடுத்தாரு பாருங்க ஒரு விளக்கம்

கொடுத்தாரு பாருங்க ஒரு விளக்கம்

ஒன்றுமே இல்லாததற்கு ஒரு விளக்கம் கொடுத்தார் பாருங்க, சால்வடோர் கராவ். அதை நம்பிதான் இவ்வளவு அதிக பணம் கொடுத்து வாங்கிச் சென்றுள்ளார் ரசிகர் ஒருவர். அப்படி என்ன விளக்கம் என்கிறீர்களா? இப்போ பார்த்துகிட்டீங்கன்னா.. இந்த வெற்றிடம் இருக்கே.. அது வேற ஒன்னும் இல்ல.. முழுக்க முழுக்க எனர்ஜிதான் இப்படி நிறைந்து போய் இருக்கிறது.. ஜெர்மனி இயற்பியல் விஞ்ஞானி, ஹைசன்பெர்க் சொன்னாரு இல்லையா.. நிச்சயமற்ற கொள்கை.. இதுவும் அதேதாங்க. ஒன்றுமே இல்லாததற்கும் ஒரு வெயிட் இருக்கும். அதனால, இந்த வெற்றிடத்தில் எனர்ஜி இருக்கிறது. இது துகள்களாக மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. நமக்குள்ளும் இருக்கிறது" இப்படி ஒரு விளக்கத்தைதான் கொடுத்துள்ளார், நம்ம சிற்பி சிங்காரம். ஸாரி.. சால்வடோர் கராவ்.

 பணத்தை பிடிங்க, ஆளை விடுங்க

பணத்தை பிடிங்க, ஆளை விடுங்க

இந்த விளக்கத்தை புரிந்து கொள்ள முயற்சி செய்து மண்டை சுற்றிபோவதை விட கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டு "சிற்பத்தை" வாங்கிட்டு போய்விடலாம் என நினைத்த வாடிக்கையாளர் 18,000 டாலரை கொட்டிக் கொடுத்துள்ளார். சிற்பி, சால்வடோர் கராவ் இப்படியாக, இல்லாத ஒன்றை இருப்பதாக கூறி, சிலை விற்பனை செய்வது இது முதல் முறை கிடையாது.

இவருக்கு இதேதான் வேலை

இவருக்கு இதேதான் வேலை

இப்படித்தான் கடந்த பிப்ரவரியில், மிலன் நகரில் உள்ள பியாஸ்ஸா டெல்லா ஸ்கலாவில் கண்ணுக்குத் தெரியாத சிற்பம் என்று "புத்தர் சிந்தனையை" காட்சிப்படுத்தியுள்ளார். அதாவது பார்ப்பவர்கள் என்ன வேண்டுமானாலும் கற்பனை செய்து கொள்ள வேண்டுமாம். அது அங்கே சிற்பம் போல கண்ணுக்கு தெரியுமாம். அதெல்லாம் சரிதான்.. இதற்கு எதற்கு ரூ.13 லட்சம் கொடுத்து கற்பனை செய்து கொள்ள வேண்டும், விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்தாலே, பல சிற்பங்கள் குறுக்கே மறுக்கே ஓடுமே என்பதுதான் நம்மை போன்றோரின் கேள்வி.

 யாரு பொண்டாட்டி பத்தினியோ

யாரு பொண்டாட்டி பத்தினியோ

இப்படித்தான் வடிவேலு ஒரு திரைப்படத்தில் கடவுளை காட்டுகிறேன் என்று ஊர் மக்களை கூட்டிப் போய் எதுவுமே இல்லாத வெற்றிடத்தை காட்டி, அங்கே பாருங்க கடவுள் இருக்கிறார் என்பார். ஊர் மக்கள் கடுப்பில் திட்ட ஆரம்பித்தால், யார் பொண்டாட்டி பத்தினியோ அவன் கண்ணுக்குதான் அங்கே நிற்கும் கடவுள் தெரிவார் என ஒரே போடாக போடுவார் வடிவேலு. அத்தனை பேரும், ஆமாம், அங்கே நிற்கிறார் பாருங்க கடவுள் என கைகூப்பி கும்பிட ஆரம்பிப்பார்கள். எங்கையோ, யூடியூப்பில் இந்த வீடியோவை பார்த்த பிறகுதான், இத்தாலிய சிற்பி, சால்வடோர் கராவுக்கு இப்படி ஒரு சிந்தனை உதித்திருக்க வேண்டுமோ!

English summary
An Italian artist sold an invisible sculpture for over $18,000 and had to give the buyer a certificate of authenticity to prove it’s real.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X