For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகின் முதல் “தலைமாற்று” அறுவை சிகிச்சை - ரஷ்ய கணினி விஞ்ஞானிக்கு 2017ல் நடக்குது!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: ரஷ்யாவைச் சேர்ந்த கம்யூட்டர் சயின்டிஸ்ட் ஒருவருக்கு வருகின்ற 2017ம் வருடத்தில் "தலை" மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

ரஷ்யாவைச் சேர்ந்தவர் வலேரி ஸ்பைரிடோநோவ். இவர் ஒரு மிகச்சிறந்த கம்ப்யூட்டர் விஞ்ஞானி ஆவார்.

இவர் "வெர்டிங் ஹோப்மான்" என்ற மரபணு திசுக்கள் பாதிப்பு நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வருகின்றார்.

Italian-Chinese medical team to perform first head transplant

தலையை மாத்திடலாம்:

இது குறித்து பல நிபுணர்களிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது இவருக்கு தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம் என ஆலோசனை கூறினார். அதை அவர் ஏற்றுக் கொண்டார்.

இரண்டு நாடுகள் கூட்டணி:

அதை தொடர்ந்து இத்தாலி நரம்பியல் நிபுணர் டாக்டர் செர்ஜியோ கேன வெரோவும், சீன அறுவை சிகிச்சை நிபுணர் ரென் ஸியோடாங்கும் இணைந்து இந்த அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டனர்.

சீனாவில் அறுவைசிகிச்சை:

சீனாவின் ஹார்பின் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவமனையில் வைத்து அறுவை சிகிச்சை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

2017ல் சாத்தியமே:

இந்த அறுவைசிகிச்சை வருகிற 2017 ஆம் ஆண்டில் டிசம்பர் மாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முலம் உலகிலேயே முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நபர் என்ற பெருமையை வலேரி ஸ்பைரி டோநோவ் பெறுகிறார்.

English summary
An Italian-Chinese medical team plan to perform the world's first head transplant in China, one of the surgeons said Friday, amid concerns over medical ethics in the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X