For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பரவும் கொரோனா.. உயரும் பலி.. இத்தாலியில் மட்டும் இறப்பு எண்ணிக்கை ஏன் இப்படி அதிகரிக்கிறது? பின்னணி

Google Oneindia Tamil News

ரோம்: கொரோனா வைரசால் ஐரோப்பாவிலேயே அதிகம் பேரை பலிகொடுத்த நாடு இத்தாலி. ஏன் இந்த குட்டி நாடு இவ்வளவு பெரிய தாக்கத்தை சந்தித்து வருகிறது என்ற கேள்வி உலகம் முழுக்க எழுந்துள்ளது.

பலி எண்ணிக்கையில் ஐரோப்பாவிலேயே இத்தாலிதான் முதல் இடத்தில் உள்ளன. உலக அளவில், அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் இரு இடங்களில் உள்ளன. இத்தாலியில் நாளொன்றுக்கு, சராசரியாக 611 பேர் கொரோனாவுக்கு பலியாகின்றனர்.

இத்தாலியில் இதுவரை 68,900 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

புதுவகை கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம்- ஹர்ஷ் வர்தன் புதுவகை கொரோனா வைரசை பார்த்து மக்கள் பீதியடைய வேண்டாம்- ஹர்ஷ் வர்தன்

 மக்கள் தொகை

மக்கள் தொகை

ஆனால் மக்கள் தொகை மற்றும் பலி எண்ணிக்கை விகிதத்தை எடுத்துப் பார்த்தால் இத்தாலி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பது புரிகிறது. அமெரிக்கா, பிரேசில், இந்தியா, மெக்சிகோ ஆகிய நாடுகள் பலி எண்ணிக்கையில் இத்தாலியைவிட அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்துள்ளன என்ற போதிலும், இந்த நாடுகளின் மக்கள் தொகை இத்தாலியை விட அதிகம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

 முதியோர் எண்ணிக்கை

முதியோர் எண்ணிக்கை

உலகிலேயே மிகவும் முதியோர் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்று இத்தாலி. ஜப்பானுக்கு அடுத்தபடியாக இத்தாலியில்தான் முதியோர் அதிகம் உள்ளனர். நான்கு இத்தாலியர்களில் ஒருவர் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள்தான். இதனால்தான், இத்தாலியில் கொரோனா இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

கூட்டுக் குடும்பம்

கூட்டுக் குடும்பம்

மற்றொரு காரணம், மல்டிஜெனரேஷனல் வீடுகள். இத்தாலியில் வீடுகள் பொதுவானவை. வயதானவர்கள், இளம் தலைமுறையினருடன் ஒரே வீடுகளில் தங்குகிறார்கள். எனவே, வெளி வேலைகளுக்கு செல்லும் இளைஞர்களிடமிருந்து முதியோருக்கு, கொரோனா பரவியுள்ளது.
தொற்றுநோய் தொடங்கிய காலகட்டத்திலிருந்து, இத்தாலியில் கொரோனா வைரஸால் கொல்லப்பட்டவர்களில் 95% பேர் 60 க்கும் மேற்பட்டவர்கள்.

இரு வாரங்களில் அதிகம்

இரு வாரங்களில் அதிகம்

இத்தாலியின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு வாரங்களில் அதிகரித்துள்ளது. ஒவ்வொரு 1 லட்சம் பேரில் 15.9 பேர் கொரோனா வைரசால் பலியாகியுள்ளனர். இது ஸ்பெயினில் 6.3, ஜெர்மனியில் 6.9 மற்றும் பிரான்சில் 8.3 என்ற அளவுக்குத்தான் உள்ளது. ​​நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான ஐரோப்பிய மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.

லாக்டவுன் அறிவிப்பு

லாக்டவுன் அறிவிப்பு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை நாட்களில், கொரோனா பரவல் அதிகமாகி, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்துவிட கூடாது என்பதால், வெள்ளிக்கிழமை, இத்தாலிய அரசு மற்றொரு லாக்டவுனை அறிவித்தது. டிசம்பர் 24 முதல் ஜனவரி 6 வரை, பார்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட வேண்டும், மேலும் நாடு முழுவதும் பயண மற்றும் இயக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

மருத்துவமனைகள்

மருத்துவமனைகள்

சில மாதம் முன்பு, வடக்கு இத்தாலி மோசமாக பாதிக்கப்பட்டது. ஆனால் இந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் நோய்வாய்ப்பட்ட கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான படுக்கைகள் இல்லை. இதேபோன்ற நிலை மீண்டும் நிகழாமல் இருக்க, நாடு முழுவதும் தீவிர சிகிச்சை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு முயல்கிறது. ஆனால் பல மருத்துவமனைகளில் நோயாளிகளை பராமரிக்க போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லை. இது, செலவுக் குறைப்பு நடவடிக்கைகளை வெகு காலம் முன்பிருந்து அரசு எடுத்ததன் விளைவாகும் என்கிறார்கள் அந்த நாட்டு சுகாதாரத்துறையினர்.

English summary
Italy is the country with the highest number of coronavirus deaths in Europe. The question of why this small country is having such a big impact has arisen all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X