For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடித்துவிட்டோம்.. எதிர்செல்களை உருவாக்கும்.. இத்தாலி அறிவிப்பு

Google Oneindia Tamil News

ரோம்: கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளார்கள். இந்த தடுப்பூசி வைரஸ் தொற்றுக்கு எதிராக மனித உயிரணுக்களில் எதிர்செல்களை உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    World's First Coronavirus Vaccine Developed in Italy

    சீனாவின் வுகானில் இருந்து உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கோவிட் 19 எனப்படும் கொரோனா பெருந்தொற்று பரவி உள்ளது. இந்த தொற்றால் கொத்துக்கொத்தாக ஒவ்வொரு நாட்டிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதுவரை உலகம் முழுவதும் 36லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2லட்சத்து 60 ஆயிரம் உயிரிழந்துள்ளனர்.

    நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், வயதானவர்கள், உடலில் ஏற்கனவே நோய் பாதித்தவர்கள் இந்த தொற்றால் மூச்சுத்திணறலை சந்தித்து உயிரிழக்கிறார்கள். இதற்கு தடுப்பு மருந்தை இதுவரை எந்த நாடும் கண்டுபிடிக்கப்படவில்லை.

    கொரோனா ஆராய்ச்சி.. முக்கிய கண்டுபிடிப்பை வெளியிடும் முன் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் சீனர் மர்ம பலிகொரோனா ஆராய்ச்சி.. முக்கிய கண்டுபிடிப்பை வெளியிடும் முன் சுட்டுக்கொலை.. அமெரிக்காவில் சீனர் மர்ம பலி

    கோடிகளை கொட்டின

    கோடிகளை கொட்டின

    எனினும் கொரோனா தொற்றுக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் தீவிரமாக இறங்கி உள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்பட பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வல்லரசு நாடுகள் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க பல்லாயிரம் கோடிகளை இறக்கி உள்ளன. தற்போதைய நிலையில் தடுப்பு மருந்துகளை உருவாக்கி இந்த மேற்கத்திய நாடுகள் சோதித்து வருகின்றன.

    எலியை வைத்து பரிசோதனை

    எலியை வைத்து பரிசோதனை

    அந்த வகையில் மனித செல்களில் ஊடுருவியுள்ள கொரோனா வைரசை கட்டுப்படுத்தக்கூடிய தடுப்பூசியை கண்டறிந்துள்ளதாக இத்தாலி அறிவித்துள்ளது. ரோம் நகரில் டாகிஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக மருந்தை கண்டறியும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வந்தனர்.. எலிகளை வைத்து ஸ்பாலான் என்ற மருத்துவமனையில் மருந்தை பரிசோதித்தும் வந்தனர்.

    எதிர்செல்கள் உருவாகும்

    எதிர்செல்கள் உருவாகும்

    இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. மனித உயிரணுக்களில் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "தடுப்பூசியை சோதனை செய்வதற்கு எலிகளை பயன்படுத்தினோம். தடுப்பூசிக்கு பிறகு எலிகளில் உள்ள செல்கள் வைரசுக்கு எதிராக எதிர்செல்களை உருவாக்கி கொண்டுள்ளது. இதேபோன்று மனித உயிரணுக்களிலும் வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக எதிர்செல்களை தடுப்பூசிகள் உருவாக்கும்.

    பரவாமல் கட்டுப்படுத்தப்படும்

    பரவாமல் கட்டுப்படுத்தப்படும்

    இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று மனித உயிரணுக்களில் மேலும் அதிகரிக்காமல் கட்டுப்படுத்தப்படும். குறிப்பாக கொரோனா வைரசால் பாதிக்கப்படக்கூடிய நுரையீரல் உயிரணுக்களில் வைரசுக்கு எதிராக எதிர்சக்திகளை உருவாக்குவதற்கு இந்த தடுப்பூசிகள் பயன்படும்" என்றார்கள். இந்நிலையில் ஆராய்ச்சியை முன்னின்று நடத்தி வரும் இத்தாலியின் டாகிஸ் நிறவனத்தின் தலைமை செயல் அதிகாரி லுயிஜி அவுரிசிசியோ இதுபற்றி கூறுகையில், தடுப்பூசியை உருவாக்கும் செயல்முறைகள் விரைவுபடுத்துவதற்காக சர்வதேச அளவில் ஒத்துழைப்பு தருவதற்கு பல நிறுவனங்கள் தயாராக இருப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்.

    English summary
    Italy told to develop first COVID-19 vaccine. Italian scientists have claimed to develop a vaccine that has successfully generated antibodies in mice that work on human cells.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X