For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நம்பிக்கை ஒளி தெரிகிறதே.. இத்தாலி, பிரான்சில் குறைந்த கொரோனா பலி எண்ணிக்கை

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமை மிகவும் தீவிரமாக இருக்கும் நிலையில், ​​இத்தாலி மற்றும் பிரான்சில் கொரோனாவால் இறப்போர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

Recommended Video

    உடலையும் மனதையும் பாதுகாப்பாக வைப்பது எப்படி? | Oneindia Tamil

    இதுவரை மோசமான பாதிப்புக்குள்ளான இரண்டு நாடுகள் இவைதான். எனவே, இந்த எண்கள், நம்பிக்கையளித்துள்ளது.

    ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, இத்தாலியில் 431 க்கும் மேற்பட்ட COVID-19 இறப்புகள் பதிவாகியுள்ளன. முந்தைய நாள் 619 இறப்புகள் பதிவாகியிருந்தன.

    இத்தாலியில் குறைந்தது

    இத்தாலியில் குறைந்தது

    மார்ச் 19ம் தேதிக்கு பிறகு, தினசரி இறப்பு எண்ணிக்கை இப்போதுதான் முதல் முறையாக இத்தாலியில் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. இத்தாலியில், மொத்த இறப்பு எண்ணிக்கை இப்போது 19,899 ஆக உள்ளது, அதே நேரத்தில் 156,363 க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிப்பு பரவியதில் இருந்து 34,211 பேர் குணமடைந்துள்ளனர்.

    பிரான்ஸ் நிலவரம்

    பிரான்ஸ் நிலவரம்

    இதற்கிடையில், இறப்பு விகிதம் குறைந்து வருவதால், தீவிர சிகிச்சை பிரிவுகளில் குறைவான நோயாளிகளை அட்மிட் செய்ய ஆரம்பித்துள்ளது பிரான்ஸ். முந்தைய நாள் 345 இறப்புகள் பிரான்சில் பதிவான நிலையில், அது நேற்று 315 ஆக குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர், இம்மானுவேல் மக்ரோன் அடுத்த வாரங்களுக்கு லாக்டவுனை நீட்டிக்க திட்டமிட்டுள்ளார்.

    பிரிட்டன்

    பிரிட்டன்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இரண்டு வாரங்களுக்கும் மேலாக, கொரோனா வைரசுடன் போராடினார். பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) பல நாட்கள் கழித்த பின்னர், வார்டுக்கு மாற்றப்பட்டிருந்தார். ஒருவழியாக, இப்போது, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

    நன்றிக்கடன்

    நன்றிக்கடன்

    ஞாயிற்றுக்கிழமை செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அளித்த பேட்டியில், தனது உயிரைக் காப்பாற்றியதற்காக என்.எச்.எஸ். மருத்துவர்களுக்கும், சுகாதார ஊழியர்களுக்கும் தனது வாழ்க்கை முழுக்க கடன்பட்டுள்ளேன் என்று கூறினார்.

    English summary
    While the coronavirus pandemic situation across Europe remains extremely serious, numbers coming out of Italy and France showing a glimmer of hope.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X