For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

21 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்துச் சிதறிய எட்னா எரிமலை: விமானநிலையம் மூடல்

Google Oneindia Tamil News

ரோம்: கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய எரிமலையான எட்னா நேற்று வெடித்துச் சிதறியது. அதன் எதிரொலியாக கடானியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஐரோப்பா கண்டத்திலேயே மிகவும் உயரமான எட்னா எரிமலை, தெற்கு இத்தாலியில் சிசிலி தீவில் உள்ளது. சில நாட்களுக்கு முன்பே இந்த எரிமலை வெடிக்கும் சூழ்நிலையில், புகை கசிந்து கொண்டே இருந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எரிமலையை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று எட்னா எரிமலை வெடித்து சிதறியது. இதனால் அதில் இருந்து கரும் புகையுடன் எரிமலை குழம்பு பீறிட்டு பாய்ந்தவண்ணம் உள்ளது.

Italy's Mount Etna volcano erupts

எட்னா எரிமலை சிசிலியில் கடானியா விமான நிலையம் அருகே உள்ளது. எனவே, அதில் இருந்து வெளியேறிய புகை விண்ணிலும், விமான நிலையத்திலும் பரவிக் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக விமானப் போக்குவரத்து நிறுத்தப் பட்டு கடானியா விமான நிலையம் மூடப்பட்டது.

கடந்த 1992-ம் ஆண்டு வெடித்த எட்னா எரிமலை கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தற்போது இது வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Europe's tallest and most active volcano Mount Etna erupted on Saturday, spewing glowing lava into the air and sending a vast plume of smoke over the southern Italian island of Sicily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X