For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2014ல் அதிக லாபம் ஈட்டிய தொழில் அதிபர் அலிபாபா நிறுவனர் ஜாக் மா

By Siva
Google Oneindia Tamil News

நியூயார்க்: 2014ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய பெரும் பணக்காரர்கள் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த வெல்த் எக்ஸ் என்ற நிறுவனம் 2014ம் ஆண்டில் அதிக லாபம் ஈட்டிய பெரும் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் சீனாவைச் சேர்ந்த ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா முதலிடத்தை பிடித்துள்ளார்.

பட்டியலின் விவரம் வருமாறு,

ஜாக் மா

ஜாக் மா

ஆங்கில ஆசிரியராக இருந்து தொழில் அதிபரான ஜாக் மாவின் சொத்துக்கள் இந்த ஆண்டு 173 சதவீதம் அதிகரித்துள்ளது. அவர் இந்த ஆண்டில் மட்டும் 18.5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளார். இதன் மூலம் அவது சொத்து மதிப்பு 29.2 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

வாரன் பஃப்பெட்

வாரன் பஃப்பெட்

பிரபல அமெரிக்க முதலீட்டாளரான வாரன் பஃப்பெட்டுக்கு இந்த பட்டியலில் இரண்டாவது இடம் தான் கிடைத்துள்ளது. பெர்க்ஷயர் ஹாத்தவே நிறுவன தலைவரான பஃப்பெட் 13.5 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு 23 சதவீதம் அதிகரித்து 72.6 பில்லியன் அமெரிக்க டாலராகியுள்ளது.

பில் கேட்ஸ்

பில் கேட்ஸ்

வெல்த் எக்ஸ் பட்டியலில் 3வது இடத்தில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 2014ம் ஆண்டில் 10.5 பில்லியன் டாலர் லாபம் ஈட்டியுள்ளார். அவரது தற்போதைய சொத்து மதிப்பு 83.1 பில்லியன் டாலர் ஆகும்.

மார்க் ஜக்கர்பர்க்ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் வெல்த் எக்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அவர் இந்த ஆண்டில் 8.4 பில்லியன் டாலர் லாபம் அடைந்துள்ளார். அதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 33.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

மார்க் ஜக்கர்பர்க்ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் வெல்த் எக்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அவர் இந்த ஆண்டில் 8.4 பில்லியன் டாலர் லாபம் அடைந்துள்ளார். அதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 33.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜக்கர்பர்க் வெல்த் எக்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். அவர் இந்த ஆண்டில் 8.4 பில்லியன் டாலர் லாபம் அடைந்துள்ளார். அதன் மூலம் அவரது சொத்து மதிப்பு 33.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

பேட்ரிக்

பேட்ரிக்

தொலைத்தொடர்பு நிறுவனமான ஆல்டீஸின் நிறுவனர் பேட்ரிக் த்ராஹி 5.1 பில்லியன் லாபம் அடைந்து பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 12.9 பில்லியன் டாலர் ஆகும்.

நஷ்டம்

நஷ்டம்

2014ம் ஆண்டு அதிகம் நஷ்டம் அடைந்தவர் ரஷ்ய தொழில் அதிபர் லியோனிட் மிக்கேல்சன். நோவாடெக் நிறுவனரான லியோனிட் 7 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு 41 சதவீதம் குறைந்து 10 பில்லியன் டாலராக ஆகியுள்ளது.

அமேசான்

அமேசான்

2014ம் ஆண்டில் அதிகம் நஷ்டம் அடைந்தவர்கள் பட்டியலில் லியோனிட்டை அடுத்து சாப்ட்பேங்க் சிஇஓ மசயோஷி சன்(5.9 பில்லியன் டாலர் நஷ்டம்), கே. வா குழும தலைவர் லூய் சீ வூ(5.5 பில்லியன் டாலர் நஷ்டம்), அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்(5.5 பில்லியன் டாலர் நஷ்டம்), லாஸ் வேகாஸ் சாண்ட்ஸ் கார்பரேஷன் தலைவர் ஷெல்டன் ஆடல்சன்(5.2 பில்லியன் டாலர் நஷ்டம்) ஆகியோர் உள்ளனர்.

English summary
Alibaba founder and executive chairman Jack Ma is this year’s biggest financial gainer as the billionaire entrepreneur’s fortune has swelled by a whopping USD 18.5 billion this year to USD 29.2 billion, a report says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X