For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்படியே வாயிலேயே குத்திருவேன் பார்த்துக்க.. விஜயகாந்த் ஸ்டைலில்.. நிருபரைத் திட்டிய பிரேசில் அதிபர்

Google Oneindia Tamil News

பிரேசில்: ஊழல் குற்றச்சாட்டில் உங்கள் மனைவிக்கும் தொடர்பிருக்கிறதா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோ கொலை மிரட்டல் விடுத்ததோடு வாயில் குத்திவிடுவேன் என மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று தேவாலயத்திற்கு அதிபர் ஜெயிர் போல்சனேரோ வந்தார். அங்கு பிரார்த்தனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் அவருடைய மனைவி மைக்கேல் போல்சனேரோவுக்கும் ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியும், தற்போது செனட்டராக இருக்கும் அவரது மகன் பிளாவியோ போல்சனேரோவின் முன்னாள் ஆலோசகருமான குயிரோஸின் ஊழல் மோசடிக்கும் உள்ள தொடர்பு குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ்... தலையில்லாத உடலுக்கு சமம் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்நேரு குடும்பத்தின் தலைமை இல்லாத காங்கிரஸ்... தலையில்லாத உடலுக்கு சமம் -ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

வாய் மீது குத்த விருப்பம்

வாய் மீது குத்த விருப்பம்

அப்போது ஆத்திரமடைந்த போல்சனேரோ, நான் உங்கள் வாய் மீது குத்தி உடைக்க விரும்புகிறேன் என மிரட்டினார். இதையடுத்து சக நிருபர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் அதை கண்டு கொள்ளாமல் அவர் செய்தியாளர்கள் சந்திப்பை பாதியிலேயே முடித்துவிட்டு திரும்பினார்.

ஜெயிர் அதிபர்

ஜெயிர் அதிபர்

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜெயிர் அதிபராக பதவியேற்றார். அதற்கு முன்னர் ரியோ டி ஜெனீரோவில் சட்டசபை உறுப்பினராக இருந்த குயிரோஸ் மற்றும் பிளாவியோ போல்சனேரோ ஆகியோர் அரசு ஊழியர்களிடம் இருந்து ஊதியத்தை மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

குயிரோஸ் பணம்

குயிரோஸ் பணம்

இந்த நிலையில் 2011- 2016-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் மைக்கேலின் வங்கிக் கணக்கில் குயிரோஸ் பணத்தை டெபாசிட் செய்ததாகவும் பத்திரிகை செய்தியில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியை மைக்கேல் இதுவரை ஒப்புக் கொள்ளவும் இல்லை, மறுப்பு கருத்து தெரிவிக்கவும் இல்லை.

பொதுமக்கள்

பொதுமக்கள்

இதுகுறித்து அந்த நிருபர் கூறுகையில் எனது பணி கேள்வி கேட்பது. அதைத் தான் நான் தொழில்முறையில் செய்தேன். ஆனால் இதை ஜெயிர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதற்கெல்லாம் அவர் பொதுமக்களுக்கு பதில் கூறியே ஆக வேண்டும் என அந்த நிருபர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

English summary
Brazil President Jair Bolsonaro says that he wants to punch the reporter in the mouth for this question which links his wife with corruption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X