For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்துருச்சாம் பாகிஸ்தான்.. செம சீன் போடுதே!

Google Oneindia Tamil News

Recommended Video

    மசூத் அசாரின் மகன் உள்பட 44 தீவிரவாதிகளை கைது செய்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு

    இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் புல்வாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் மற்றும் சகோதரர் உட்பட 44 பேரை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்துள்ளதாக பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் கண்துடைப்பு நாடகத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது.

    கடந்த மாதம் 14ஆம் தேதி தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப் படை வீரர்கள் 40 பேர் வீரமரணம் அடைந்தனர்.

     </a></strong><a class=சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார் " title=" சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார் " /> சென்னை கடற்படை தளம் மீது 10 நிமிடம் வட்டமிட்ட டிரோன்.. போலீஸில் புகார்

    கடும் நெருக்கடி

    கடும் நெருக்கடி

    இந்த தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை தடை செய்ய வேண்டும் என இந்தியா மற்றும் சர்வதேச நாடுகள் கடும் நெருக்கடி கொடுத்து வந்தனர் .

    44 தீவிரவாதிகள் கைது

    44 தீவிரவாதிகள் கைது

    இந்த நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் மகன் ஹமாத் அசார் மற்றும் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூப், மற்றும் தடை செய்யப்பட்ட இயக்கங்களை சேர்ந்த 44 தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

    பல அமைப்புகளுக்கு தடை

    பல அமைப்புகளுக்கு தடை

    மேலும், ஜமாத்-உத்-தவா மற்றும் ஃபாலா-இ-இன்சனிட் ஃபவுண்டேஷன் உள்ளிட்ட அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை பாகிஸ்தான் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அப்ரி உறுதிப்படுத்தியுள்ளார்.

    நடவடிக்கை தொடரும்

    நடவடிக்கை தொடரும்

    இதுபோன்ற கைது நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக கிடைக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்திருக்கிறார்.

    இந்தியா கேள்வி

    இந்தியா கேள்வி

    எனினும், புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யாதது ஏன் என்று இந்தியா கேள்வி எழுப்பி உள்ளது. எனவே, அமைதியை விரும்புவது போன்று சர்வதேச நாடுகளை சமாளிக்க பாகிஸ்தான் நடத்தியுள்ள மற்றொரு கண்துடைப்பு நாடகம் என்று கூறப்படுகிறது.

    English summary
    44 terrorists arrested, including the leader of the Jaish-e-Mohammad; Pakistani Talented drama?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X